சென்னையில் மட்டும் ஏன் CMDA.. இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூரிலும் பெருநகர் வளர்ச்சி குழு: பிடிஆர்
சென்னை: சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) உள்ளது போல இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் ஆகிய நகரங்களிலும் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கான புதிய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் ஆகும் இது. அடுத்த 6 மாத வரவு, செலவுகள், திட்டங்கள் மீது கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை, கொரோனா நிவாரணம், உணவு, கல்வி, பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக நகர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மீதும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி உள்ளது.

சாலைகள்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பேச்சில், நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்த சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்படும். புதிய சாலைகளை கூடுதலாக அமைக்க வழி செய்யப்படும். தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெருநகரம்
ரூ.17899 கோடி நெடுஞ்சாலைகள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) உள்ளது போல இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதியில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நிதி ஒதுக்கீடு
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நகரங்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். கலைஞர் பெயரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்படும். அதேபோல் குக்கிராமங்களை மேம்படுத்த ரூ 1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
Recommended Video

குடிசை
அதற்கான பணிகளை குடிசை மாற்று வாரியம் செய்தும் வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராமப் புறங்களில் வீடுகள் இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் வீடுகள் வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்யும். 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications