செப்டம்பரில் மேட்டூர் திறப்பது இதுதான் முதல்முறை.. இதுக்கு இவ்வளவு ஆடம்பரமா விஜய்? கொடுமை!
சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை, வழக்கமான ஜூன் 12 தேதியைத் தவறவிட்டு, மிக தாமதமாக செப்டம்பர் 1-ம் தேதி சம்பா சாகுபடிக்காகத் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையை திறக்க முதல்வர் விஜய் இன்று மேட்டூர் அணையை விசிட் அடிக்கிறார். கடந்த சில வருடங்களாக தவறாமல் ஜூன் மாதம் திறக்கப்பட்ட நிலையில்.. சமீப காலங்களில் முதல்முறையாக செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
ஆனால் குறுவை சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளின் கவலையை பொருட்படுத்தாமல், முதல்வர் விஜய்யின் சில நிமிட வருகைக்காகச் செய்யப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுமக்களிடையேயும் விவசாய அமைப்புகளிடையேயும் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

தாமதமான திறப்பும் விவசாயிகளின் வேதனையும்
பொதுவாக தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் கை கொடுக்கும் போது ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், நடப்பாண்டில் பருவமழை தாமதம் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து போதிய நீர் கிடைக்காத காரணத்தால் குறுவை சாகுபடிக்கான பாசனம் முழுமையாகக் கைவிடப்பட்டது. முக்கியமாக தமிழக அரசு சரியாக வாதிட்டு தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெறாததும் காவிரியில் தண்ணீர் வராமல் போனதற்கு காரணம்.
பல லட்சம் ஏக்கர் குறுவை பரப்பளவை இழந்து விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். தற்போது கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர் இருப்பு உயர்ந்து, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் சம்பா சாகுபடிக்காக அணை திறக்கப்படுகிறது.
தாமதமாகத் திறக்கப்படும் நீரைக் கொண்டு குறுகிய கால சம்பா சாகுபடியை எப்படி ஈடுகட்டப் போகிறோம் என்ற பதற்றத்தில் டெல்டா உழவர்கள் இருக்கின்றனர்.
முதல்முறை இப்படி
கடந்த வருடங்களில் எப்போது மேட்டூர் திறக்கப்பட்டது
2021: ஜூன் 12 (வழக்கமான நாளில் திறக்கப்பட்டது)
2022: மே 24 (வரலாற்றிலேயே முதல்முறையாக முன்கூட்டியே திறக்கப்பட்டது)
2023: ஜூன் 12 (வழக்கமான நாளில் திறக்கப்பட்டது)
2024: ஜூன் 12 அன்று திறக்கப்படவில்லை (நீர் இருப்பு பற்றாக்குறையால் ஜூலை 28 அன்று தாமதமாகத் திறக்கப்பட்டது)
2025: ஜூன் 12 (வழக்கமான நாளில் திறக்கப்பட்டது)
இன்று - 2026: ஜூன் 12 அன்று குறுவைக்காகத் திறக்கப்படவில்லை (போதிய நீர்வரத்து இல்லாததால் குறுவை பாசனம் கைவிடப்பட்டு, செப்டம்பர் 1 அன்று சம்பா சாகுபடிக்காகத் திறக்கப்படுகிறது)
சில நிமிட நிகழ்வுக்கு ரூ.4.5 கோடி இரும்புத் தடுப்புகளா?
இத்தகைய இக்கட்டான சூழலில், முதல்வ]ர் மேட்டூர் அணையின் மதகுகளை இயக்கி மலர் தூவும் சில நிமிட சடங்குக்காக அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமரின் வருகைக்கான நெறிமுறைகளுக்கு நிகராக 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வருகைக்காக ஸ்பெஷல் தளம், அணை வளாகம் மற்றும் அவர் செல்லும் வழித்தடங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வதைத் தடுக்க பிரம்மாண்ட இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரும்புத் தடுப்பு வேலைகளுக்கு மட்டுமே அரசு கஜானாவிலிருந்து சுமார் ரூ.4.5 கோடி வரை செலவிடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல்கள் விவசாயிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.
இதெல்லாம் தேவையா விஜய்?
தண்ணீர் திறக்கும் நிகழ்வுக்கு செலவிடப்படும் பல கோடி ரூபாய் நிதியை, போர்க்கால அடிப்படையில் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வாய்க்கால்களைத் தூர்வாருவதற்கும், பாசனக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
குறுவை பயிர்களை இழந்து தவிக்கும் உழவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதிலும், உரங்கள் மற்றும் விதைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதிலும்தான் அரசு கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் குறுகிய நேரப் பொது நிகழ்வுக்காகச் செய்யப்படும் இந்த ஆடம்பரப் பாதுகாப்புச் செலவுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
