2 முறை நீட்டில் தோல்வி.. இன்று 3வது முறை தேர்வு எழுதும் முன்.. தற்கொலை செய்து கொண்ட மேட்டூர் மாணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு அச்சத்தில் மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Neet பயத்தால் இறந்த Dhanush | நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தலைவர்கள்

    நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று 1.12 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

    நாடு முழுக்க 16 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த முறை தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்க உள்ளது.

    தற்கொலை

    தற்கொலை

    இந்த நிலையில்தான் மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் ஏற்கனவே மருத்துவர் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். ஆனால் இரண்டு தேர்விலும் தேர்ச்சியாகாத நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். மூன்றாவதாக இன்று தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக அவர் தீவிரமாக தயாராகி வந்தார்.

    அச்சம்

    அச்சம்

    ஆனால் எங்கே மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள்.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    நீட் தேர்வை எழுத அஞ்சி அல்லது நீட் தேர்வில் தோல்வி அடைந்து மாணவர்கள் வரிசையாக பலியாகி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையி கமிட்டி அமைக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்டது. நாளை சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    நீக்கம்

    நீக்கம்

    இப்படிப்பட்ட நிலையில்தான் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து நீட் தேர்வால் எங்கும் தற்கொலை நடக்கவே கூடாது. மாணவர்கள் தவறான முயற்சியில் ஈடுபட வேண்டாம், என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+