Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா, டிவியில் சாதிக்க ஆசையா? எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். நிறைய பேர் துணை இயக்குநர்களாக இணைந்து பணியாற்றி இயக்குநர்களாக புரமோசன் அடைவார்கள். இன்றைக்கு திரைப்படத்துறை பற்றியும் தொலைக்காட்சி துறை பற்றியும் படிக்க கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் குறைந்த செலவில் படிக்க விரும்புவர்களுக்கு அரசுதுறை கல்வி நிறுவனம் உள்ளது.

MGR Film and Television Training Institute Admission for Academic Year 2023-2024

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016- 2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1.இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை காட்சிக்கலை
(எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை காட்சிக்கலை
(ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை
எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts
(Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை 11.05.2023 முதல் 31.05.2023 வரை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு 02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

MGR Film and Television Training Institute Admission for Academic Year 2023-2024

மேலும்,02.06.2023 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சினிமா துறையிலும் தொலைக்காட்சி துறையிலும் மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய நிறுவனம் எம்ஜிஆர் திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம். ஆர்வமுள்ள அனைவரும் உடனே விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+