எம்ஜிஆர் முதல் கமல் வரை.. முதல் தேர்தலில் நடிகர்கள் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?
சென்னை: விஜய்க்கு முன்பாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை திரையுலகில் இருந்து அரசியல் களத்தில் பலர் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றனர்? எத்தனை தொகுதிகளில் வென்றனர் என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட விஜய்யின் கட்சி எத்தனை சதவீத வாக்குகள் பெறும்? வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அதிகரித்துள்ளன.

முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த எம்ஜிஆர்
விஜய்க்கு பெரிய கூட்டம் வந்தாலும், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்றாக உள்ளது. விஜய்க்கு முன்பாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை திரையுலகில் இருந்து அரசியல் களத்தில் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத விவரங்களை பார்க்கலாம்.
எம்.ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்.ஜி.ஆர் அந்த தேர்தலில் 30.4 சதவீத வாக்குகள் பெற்ற்று ஆட்சியை பிடித்தார். முதல் தேர்தலிலேயே 51,94,876 வாக்குகள் பெற்று 130 தொகுதிகளில் வென்றார். 200 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், 130 தொகுதிகளில் வென்றது.
என்.டி. ராமா ராவ், சிவாஜி கணேசன்
தமிழகத்தை போல ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த என்.டி. ராமா ராவ் தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை தெலுங்குதேசம் கட்சி எதிர்கொண்டது. 250 தொகுதிகளில் 202 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. 46.2 சதவீத வாக்குகள் பெற்று முதல் தேர்தலிலேயே ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுதினார்.
* எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கிய பெரிய நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன். 1989 தேர்தலை எம்.ஜி.ஆர் மனைவி விஎன் ஜானகியுடன் இணைந்து அதிமுக அணியுடன் இணைந்து 50 தொகுதிகளில் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டது. ஆனால், இதில் சிவாஜி உள்பட அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது.
விஜயகாந்த், சிரஞ்சீவி
* விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். 2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இதர அனைத்து தொகுதியிலும் தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 8.4 சதவீத வாக்குகளை விஜயகாந்த் பெற்றார்.
* நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2009 ஆம் ஆண்டு தனது முதல் பொதுத்தேர்தலை சந்தித்தது. 288 தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தம் 16.3 சதவீத வாக்குகள் பெற்று அவரது கட்சி வென்றது. ஆனால், அவரது கட்சி நாளைடைவில் கரைந்து போனது. இறுதியாக காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்த சிரஞ்சீவி மீண்டும் முழு நேரமாக சினிமா பக்கம் திரும்பினார்
பவன் கல்யாண்:
சிரஞ்சீவியின் சகோதராரான பவன் கல்யாண் 2019 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலை சந்தித்தார். 137தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய பவன் கல்யாணால் 5.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.
கமல்ஹாசன்:
அப்படியே தமிழகம் பக்கம் வந்தால் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 2.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனே தோல்வியை தழுவினார்.
2026 தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் விஜய் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் அவரை வரவேற்கிறது.. அந்தக் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? ரசிகர்கள் தொண்டர்களாக மாறுவார்களா? விஜய் எத்தனை சதவீதம் வாக்கு பெறுவா? எத்தனை சீட்கள் கிடைக்கும் என்பது எல்லாம் வரும் மே 4 ஆம் தேதியே தெரியவரும்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications