எம்.ஜி.ஆர் போட்ட அந்த 38 வருட சட்டத்தில் மாற்றமில்லை! கள் இறக்கு அனுமதியில் வேளாண் பட்ஜெட் தந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், கடந்த 38 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் "கள் இறக்குவதற்கான தடை" நீக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாற்று அரசியலைப் பேசும் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு சாராயக் கலப்படம் மற்றும் போலி மதுக்கடத்தலைத் தடுத்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் அன்றைய எம்.ஜி.ஆர் அரசால் கள் இறக்கத் தடை விதிக்கப்பட்டது.

MGR Toddy Tapping Ban Tamil Nadu Agriculture Budget Vijay Government Tamil Nadu Farmers

அத்துடன் கள்ளுக்குப் பதிலாக அரசு மூலமாகவே பாதுகாப்பான முறையில் மதுபானங்களை விநியோகிக்கும் நோக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் விற்பனை கொண்டுவரப்பட்டது. அன்று அமல்படுத்தப்பட்ட இந்தத் தடையை நீக்கி, மறுபடியும் கள் இறக்கப் புதிய தவெக அரசு அனுமதி வழங்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு இன்று மாநிலம் முழுவதும் பரவியிருந்தது.

தென்னை மற்றும் பனை விவசாயம்

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மற்றும் பனை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னை மரங்களைத் தாக்கி வரும் நோய்களாலும், கொப்பரைத் தேங்காய்க்கு உரிய சந்தை விலை கிடைக்காததாலும் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடியில் தவித்து வருகிறார்கள்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் கள் இறக்கவும் அதனை விற்பனை செய்யவும் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இயற்கை பானமான கள்ளிற்கு அனுமதி அளித்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

விவசாயிகள் அப்செட்

ஆனால், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறாததால், கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

60 ஆண்டு காலமாகத் திராவிட அரசுகளிடம் போராடியும் கோரிக்கை நிறைவேறாத நிலையில், இந்த அரசாவது கள் இறக்க அனுமதிக்கும் என நம்பிய விவசாயிகளுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கள் என்பது மதுபானம் அல்ல அது ஒரு இயற்கை விவசாய உபபொருள் என்பதால், அதற்கு அனுமதி அளிப்பது கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பெருமளவில் உயர்த்தும் என்ற விவசாயிகளின் வாதம் இந்த பட்ஜெட்டிலும் கண்டுகொள்ளப்படவில்லை.

பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி செய்தித்தாளைப்போல வாசித்துள்ள இந்த வேளாண் பட்ஜெட்டினால் விவசாயிகளுக்கு எந்தவொரு புதிய மாற்றமும் நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், நெல் பாதுகாப்பு கிடங்குகள் மற்றும் இயற்கை உரத்தை ஊக்கப்படுத்தும் புதிய திட்டங்கள் எதுவும் இதில் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றமளிக்கிறது. பயிர் சேத நிவாரணம், கொள்முதல் விலை மற்றும் விளைபொருட்களுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்புகளை உறுதி செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது" என்றெல்லாம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+