மின் அட்டையுடன் ஆதார் இணைப்பிற்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. தடையா?
சென்னை: மின் அட்டை - ஆதார் இணைப்பிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் நேரில் முகாம் மூலமும் இணைக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம் கட்டணம் இன்றி இயங்கி வருகிறது.

வசதி
இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகிறது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிலருக்கு மட்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எளிதாக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம். https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற பக்கத்தில் இதை எளிதாக மேற்கொள்ள முடியும். ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

வாடகை
வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம். ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதுதான் விதி. இதற்காக நேரடி முகாம்கள் நடந்து வருகின்றன.

வழக்கு
இந்த அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தில், இந்த திட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். அதேபோல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது.

தீர்ப்பு
இதனால் சமூக நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே இதற்கு தடை விதித்து தீர்ப்பு அளிக்க வேண்டும், என்று வாதம் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், இந்த ஆதார் இணைப்பு என்பது மீட்டருடன் செய்யப்படுவதுதான். வீட்டை காலி செய்யும் போது அதை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். இதன் மூலம் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற முடியும். அனைத்து ஆய்வுகளையும் செய்து ஒப்புதலை பெற்ற பிறகே இந்த திட்டத்தை கொண்டு வந்தோம், என்று வாதம் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலக்கெடு
ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நேரில் செய்ய முகாம்கள் நடத்தப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை இதற்காக முகாம் நடக்கும். இந்த முகாமில் சென்று எளிதாக நீங்கள் உங்கள் கணக்கை ஆதாருடன் இணைக்க முடியும். இது இலவச முகாம் ஆகும். இதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டியது கிடையாது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பாக அதிகாரிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று போடப்பட்டு உள்ளது. மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க யாரும் பணம் வாங்க கூடாது. அதிகாரிகள் யாரும் மக்களிடம் கட்டணம் வசூலிருக்க கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications