சென்னையில் இந்த 4 சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும்.. மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடுசெய்ய நடவடிக்கை
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னையில் கடந்த மாதம் தொடக்கத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வசதியாக 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் கடந்த மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் உருவானது. இதையடுத்து டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு டிசம்பர் 5ம் தேதி ஆந்திராவில் புயல் கரையை கடந்தது.

முன்னதாக புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கியது. மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்துக்கு பிறகு தான் சென்னையில் முழுவதுமாக தண்ணீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
இந்த வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த மாதம் 4-ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 4 வாரங்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை (ஜனவரி 6ம் தேதி), வரும் 20ம் தேதி, பிப்ரவரி மாதம் 3ம் தேதி மற்றும் பிப்ரவரி 17 ஆகிய தேதிகளில் வரும் 4 சனிக்கிழகைகளில் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு முன்பு பாடங்களை நடத்தி முடிப்பதோடு, மாணவர்களை தேர்வுக்கு தயாராக்க வேண்டும். இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைய சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இந்த உத்தரவு என்பது சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications