Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூறாவளி.. மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், இன்போசிஸ், இன்டெல்.. அடுத்தடுத்து வேலைகளை இழக்கும் ஐடி ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மைக்ரோசாஃப்ட் தொடங்கி இன்டெல் நிறுவனம் வரை பல ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடுமையான பணி நீக்கங்கள் தீவிரமாக நடக்க தொடங்கி உள்ளன.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்திய செலவு குறைப்பு நடவடிக்கையாக சுமார் 9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். இது உலக தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்து வரும் ஒரு மாற்றத்தின் பிரதிபலிப்பாகும்.

Wipro Microsoft jobs

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்க நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால், பணிநீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏஐக்கு ஏற்படும் செலவுகளால் மற்ற செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் காரணமாக, மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளன. இந்த பணிநீக்கங்கள் பல்வேறு துறைகளிலும், வெவ்வேறு இடங்களிலும் பரவியுள்ளன.

கூகுள் நிறுவனம் ஏப்ரல் மாதம் தனது கூகுள் டிவி பிரிவில் பலரை குறைத்தது. இந்த நடவடிக்கை, கூகுள் டிவி பட்ஜெட்டில் 10% குறைப்புக்குப் பிறகு எடுக்கப்பட்டது. இது கூகுள் டிவி குழுவில் சுமார் 750 பேர் வேலைகளை இழந்தனர்.

இன்டெல் நிறுவனம் அதன் தொழிற்சாலை பணியாளர்களை 20% வரை குறைக்கத் தயாராகி வருகிறது. மே மாதத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 6,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கம், தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்களைப் பாதித்தது

இன்போசிஸ் நிறுவனம், உள் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெறாத 240 புதிய பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிப்ரவரி 2025 இல், இதே காரணங்களுக்காக 300க்கும் மேற்பட்ட புதியவர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்தது. சிஸ்டம் இன்ஜினியர்ஸ் (எஸ்இ) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர்ஸ் (டிஎஸ்இ) ஆகியோர் இதில் நீக்கப்பட்டு உள்ளனர். இந்த பணிநீக்கமானது உலகளாவிய பணியாளர்களில் 4%க்கும் குறைவானது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருவது ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவை நோக்கி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற பணிநீக்கங்கள், தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உணர்த்துகின்றன. நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைத்து, புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நகர்கின்றன.

ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.

வேலை இழப்புக்குக் காரணமான செயற்கை நுண்ணறிவு

ஃபியூச்சரிஸம் (Futurism) ஊடகத்தின் அறிக்கையின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, திறமையான நிபுணர்கள் செய்து வந்த வேலைகளை தானியங்கி முறையில் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative sectors) கூட, குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த துறைகளில் அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+