Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிடில் கிளாஸ் என்ற இனமே இனி இருக்காது.. அழிய போகிறது! இந்தியர்களுக்கு வல்லுநர் விடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் என்ற இனமே இனி இருக்காது. அந்த மிடில் கிளாஸ் இனம் அழிய போகிறது.. மாத சம்பளத்தை வைத்து பட்ஜெட்டில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.

இந்தியாவின் நடுத்தர வர்க்கக் கதை முடிவுக்கு வரப்போகிறது. இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடக்க போகின்றன. சம்பளத்தை அடிப்படையாக.. அதாவது மாத வருமானத்தை அடிப்படையாக வைத்து வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட போகிறார்கள். படிப்பு, கடின உழைப்பு, மாத பட்ஜெட்டை மட்டும் நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள். அந்த எண்ணிக்கை குறையும். அல்லது அழியும். உங்கள் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி அதன்பின் ரிட்டையர் ஆவார்கள்.

Middle class clan will be no more in India says an expert on end of salaried people

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய அந்த பழைய முறை இனி தொடராது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து, சம்பள உயர்வை குறிவைத்து பணியாற்றி, வரும் வருமானத்தில் சிலவற்றை சேமித்து வாழ்க்கை நடத்தும் காலம் இனி இருக்காது. அந்த பிரிவு வெகுவாக குறையும். முக்கியமாக கடின உழைப்பாளிகள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஒயிட் காலர் தொழிலாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது AI ஆல் செய்யப்படுகின்றன. கூகுள் அதன் கோடிங்கில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே AI மூலம் செய்யப்படுகிறது என்று கூறுகிறது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப துறையையே மாற்ற போகிறது. இந்த துறையை நம்பி இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட போகிறார்கள்.

இனிமேல் தொழில் தொடங்குவதுதான் எதிர்காலம். பலரும் அதை நோக்கி நகருவார்கள். இதனால் ஏழைகள் - பணக்காரர்கள் இடையே வேறுபாடு அதிகரிக்கும். ஒன்று ஏழைகள் அதிகம் இருப்பார்கள். இல்லை பணக்காரர்கள் அதிகம் இருப்பார்கள். மிடில் கிளாஸ் என்ற இனம் இருக்காது, என்று எச்சரித்து உள்ளார்.

முக்கியமாக கணினி வந்த போது இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கணினி மூலம் பலர் வேலை இழக்க போகிறார்கள் என்று கூறப்பட்டது. மாறாக கணினி மூலம் பலர் வேலை பெற்றனர். ஐடி துறை உட்பட பல துறைகள் தொடங்கின. அதேபோல் ஏஐ பார்த்து நாம் அச்சப்பட்டாலும் இது மிடில் கிளாசுக்கு எதிராக இருந்தாலும் இதுவும் பல துறைகளை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

பொருளாதாரமே சரியும்

சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.

2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.

Middle class clan will be no more in India says an expert on end of salaried people

இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமா தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம் என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+