பாஜகவுக்கு "பைபை" சொன்ன மிடில் கிளாஸ் மக்கள்! டேட்டா இதோ! பட்ஜெட்டாலும் பலன் இல்லை
சென்னை: 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜக, இந்தமுறை கூட்டணி உதவியால்தான் ஆட்சியமைத்தது. பாஜகவின் தேர்தல் அரசியலின் முதுகெலும்பாக கருதப்பட்டது மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கம் தான். அந்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான பட்ஜெட்டிலும் மிடில் கிளாஸ் மக்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவுக்கு திட்டங்கள் இல்லாததால் அவர்கள் பாஜகவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்திய மக்கள் தொகையில் 31% மிடில் கிளாஸ் மக்கள் தான். பட்ஜெட்டில் தங்களுக்காக நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
பாஜக எப்படி தேர்தலில் தங்களுக்கு ஓட்டுபோடாத தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை பட்ஜெட்டில் புறக்கணித்துவிட்டு, ஆட்சி அமைக்க ஆதரவளித்த ஆந்திரா, பீஹார் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்களோ, அதேபோல தங்களுக்கு வாக்களிக்காத மிடில் கிளாஸ் மக்களுக்கும் எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல், வடிவேலு பாணியில் எம்ப்டியான ஜோப்புகளை காட்டியுள்ளனர்.

மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய சிக்கலே வரிவிதிப்பு தான். வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் மிடில் கிளாஸ் மக்களாக உள்ளனர். இந்த சிக்கல்களை நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டதால், வரியில் மாற்றங்கள் கொண்டுவந்து மக்களின் துயரை குறைக்க அரசாங்கம் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட கால மூலதன ஆதாய வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், குறுகிய கால மூலதன ஆதாய வரியை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்த பரிந்துரைத்திருப்பது மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே கடுமையான வரிச்சுமையில் உள்ள மிடில் கிளாஸ் மக்கள், முதலீடு மூலம் கிடைக்கும் வரவுக்கும் கூடுதல் வரியை சுமக்க வேண்டும். இதன்மூலம் நாளடைவில் மக்கள் முதலீடு செய்யும் நடவடிக்கை குறைந்து, அவர்களுக்கான வருவாயும் பாதிக்கப்படும். Indexation Benefit சலுகையை நீக்கியதன் மூலம், தங்கள் சொத்துகளை விற்பதிலும் மிடில் கிளாஸ் மக்கள் கடும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி மிடில் கிளாஸ் மக்கள் சந்திக்கும் வரிச்சுமையை குறைக்காமல், சுமையை மேலும் அதிகரிக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்தான் பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை, 2024 தக்கவைக்க முடியாமல் போனதற்கு மிடில் கிளாஸ் மக்கள் அதிருப்தியே காரணம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள தரவுகளும் அதை உறுதிபடுத்துகின்றன. சி.எஸ்.சி.டி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் பாஜகவிடம் இருந்து விலகி சென்றிருப்பதை விளக்குகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் 38 சதவீதம் கிடைத்த மிடில் கிளாஸ் வாக்குகள், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 35 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன்மூலம் 3 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது. அதுவே 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மிடில் கிளாஸ் வாக்குகள் அந்தளவுக்கு கிடைக்கவில்லை.
அதனுடன் ஒப்பிடும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிடில் கிளாஸ் வாக்கு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜகவுக்கு அப்பர் மிடில் கிளாஸ் மக்களின் வாக்கும் குறைந்திருக்கிறது. 2019 தேர்தலில் 44 சதவீதம் கிடைத்த மிடில் கிளாஸ் வாக்கு, 2024 தேர்தலில் 41 சதவீதமாக குறைந்துள்ளது. அதே அப்பர் மிடில் கிளாஸ் பிரிவில் இந்தியா கூட்டணியின் வாக்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications