Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை துறைமுகத்தில் நிற்கும் அமெரிக்க போர்க்கப்பல்.. அடங்கேப்பா இத்தனை பாதுகாப்பு வசதிகள் கொண்டதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க கடலோர காவல் படைக்கு சொந்தமான மிட்ஜெட் என்ற போர்க்கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இந்த மிட்ஜெட் போர்க்கப்பலில் UAS Scan Eagle drone- மற்றும் MH-65 ஹெலிகாப்டர் உள்பட அதிநவீன உபகரணங்கள் உள்ளன.

இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல நட்புறவு உள்ளது. இருநாடுகளுக்கும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொண்டு பரஸ்பரம் நலன் சார்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க கடலோர காவல் படைக்கு சொந்தமான மிட்ஜெட் என்ற போர்க்கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.

சென்னை வந்தடைந்தது

சென்னை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படையில் மிகவும் முக்கிய கப்பலான இந்த மிட்ஜெட், சென்னை துறைமுகத்திற்கு நேற்று(16 அம் தேதி) வந்தது. 4 நாட்கள் சென்னை துறைமுகத்தில் இந்த கப்பல் நங்கூரம் இட்டு நிற்கிறது. அதாவது வரும் 19 ஆம் தேதி வரை இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்தில் நிற்கும். இந்தியா- அமெரிக்கா இடையேயான கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிட்ஜெட் கப்பல் சென்னை வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3 ஆண்டுகள் கழித்து

3 ஆண்டுகள் கழித்து

மேலும், துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் தகவல்களை மிட்ஜெட் போர்க்கப்பல் இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான 75 ஆண்டு ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கப்பல் வருகை அமைந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2019- ஆம் ஆண்டு ஸ்ட்ரேட்டன் என்ற அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வந்திருந்தது. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது மிட்ஜெட் கப்பல் சென்னைக்கு வந்திருந்தது இந்தியாவின் கடலோர பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கப்பலின் அம்சங்கள்

கப்பலின் அம்சங்கள்

தற்போது சென்னையில் நங்கூரம் இட்டு நிற்கும் மிட்ஜெட் கப்பல் அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல்களில் மிகப்பெரியதும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதும் அம்சங்களை கொண்டதும் ஆகும். அமெரிக்கா கடற்படையின் முக்கிய அங்கமாக இருக்கும் கப்பல் பல்வேறு கண்காணிப்பு வசதிகளை கொண்டது. ஆளில்லா விமானங்களுக்கான தளம், கடலின் கடினமான கால சூழலிலும் செயல்படும் திறனை இந்தக் கப்பல் கொண்டதும் ஆகும்.

 அதிநவீன உபகரணங்கள்

அதிநவீன உபகரணங்கள்

மிட்ஜெட் போர்க்கப்பல் பிலிப்பன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கடல் வழியாக பயணித்து தற்போது இந்தியாவில் நங்கூரம் இட்டுள்ளது. இதன்பிறகு மாலத்தீவு செல்லும் மிட்ஜெட் இரு தரப்பு பயிற்சியிலும் ஈடுபட உள்ளது. மிட்ஜெட் போர்க்கப்பலில் UAS Scan Eagle drone- மற்றும் MH-65 ஹெலிகாப்டர் உள்பட அதிநவீன உபகரணங்கள் உள்ளன.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

சென்னை துறைமுகத்திற்கு வந்த இந்தக் கப்பலை வரவேற்ற அமெரிக்க துணைத்தூதர் ஜூடித்ரேவின் கூறியதாவது:- ''இந்தோ- பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. மிட்ஜெட் போர்க்கப்பலின் சென்னை பயணம் அமெரிக்கா - இந்தியா இடையேயான சுதந்திரமான மற்றும் பாதுகாப்பு மிக்க லட்சியத்தை நோக்கிய உறவை மேலும் வலுவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

மிட்ஜெட்டில் உள்ள வசதிகள்

மிட்ஜெட்டில் உள்ள வசதிகள்

மிட்ஜெட் போர்க்கப்பல் 418 அடி நீளம் கொண்டதாகும். 54 அடி உயரம் கொண்ட இந்தக்கப்பலின் அடிப்பரப்பு 22 அடியாகும். இந்தக் கப்பலில் அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள், கணினி, கண்காணிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளது. அதிகபட்சமாக 28 நாட் வேகம் செல்லக்கூடியது ஆகும். கப்பலின் சிகன்ல் கோபுரத்தின் உயரம் 154 அடியாகும். இந்த கப்பலில் 23 அதிகாரிகள், 120 மாலுமிகள் என மொத்தம் 143 சிப்பந்திகள் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+