அன்னைக்கு நள்ளிரவு 2 மணி.. விஜய் தந்த ஒரு ஷாக்.. நடுங்கிப்போன ராஜ்மோகன்.. தமிழகமும் ஆடிப்போன உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்ற அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பேச்சாளர் மற்றும் சமூக வலைதளப் பிரபலம் என அறியப்பட்ட ராஜ்மோகனுக்கு, அவரது கடின உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த அமைச்சர் பதவி பார்க்கப்படுகிறது..!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது.. தமிழகத்தின் 18வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுள்ளார்..
அவருடன் சேர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

Vijay politics Rajmohan TVK cabinet ICU story Vijay support Tamil Nadu politics emotional politics TVK ministers Vijay news political update

தவெக ராஜ்மோகன்

இந்த முக்கியமான அமைச்சரவைப் பட்டியலில், அக்கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே தூணாக நின்ற ராஜ்மோகன் இடம்பெற்றிருப்பது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன், 53,901 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10,804 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சட்டசபைக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்கிறார்..

பேச்சாளர், சமூக வலைதளப் பிரபலம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ராஜ்மோகனுக்கு, கட்சியின் தொடக்கத்திலேயே 'கொள்கைப் பரப்புச் செயலாளர்' என்ற மிகப்பெரிய பொறுப்பை விஜய் வழங்கியிருந்தார்..

தவெக அமைச்சர்

விஜய்யின் கொள்கைகளைத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்ததில் ராஜ்மோகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.. ஈழத்தமிழர் பிரச்சனை, நீட் அனிதா மரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் எனப் பல போராட்டங்களில் விஜய்யும் ராஜ்மோகனும் ஒத்த அலைவரிசையில் இருந்ததே இவர்களை ஒன்றாக இணைத்தது..

"நானே ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் கூட என்னை போன்ற ஒருவனுக்கு இவ்வளவு பெரிய பதவியைக் கொடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான்" என ஒருமுறை ராஜ்மோகன் விஜய்யின் அரசியல் பண்பைக் குறித்துப் பெருமையாகப் பேசியிருந்தார்..

ராஜ்மோகனின் இந்த அரசியல் வெற்றிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய குடும்பத் துயரமும், அதற்கு விஜய் கொடுத்த ஆதரவும் ஒளிந்து கிடக்கிறது.. தவெகவின் அரசியல் பயிற்சிப் பாசறை நடப்பதற்கு முந்தைய நாள், ராஜ்மோகனின் தந்தை மாரடைப்பால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் செஞ்ச விஷயம் - எமோஷனல்

அப்போது கலங்கி நின்ற ராஜ்மோகனை அவரது 77 வயது தந்தைதான் "இது உனக்கான நல்ல வாய்ப்பு, நீ போயிட்டு வா" என ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தார்.. ஆனால் மாநாடு தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்னரே அவரது அப்பா உயிரிழந்தார்.. அந்தப் பரபரப்பான மாநாட்டு வேலைகளுக்கு இடையிலும், விஜய் பலமுறை ராஜ்மோகனைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், "நீங்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம், குடும்பத்தோடு இருங்கள்" எனக் கனிவோடு கட்டளையிட்டாராம்.

அதுமட்டுமல்ல, அப்பா மறைவின்போது 3 நாட்களும் தவெக தொண்டர்கள் ராஜ்மோகனின் வீட்டிலேயே தங்கியிருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.. இந்த மனிதாபிமானச் செயலால் ராஜ்மோகனின் மொத்தக் குடும்பமுமே தவெக மீது மிகுந்த பற்றுடன் உள்ளது.

மாற்றத்தை நோக்கி விஜய்

இப்போது தனக்குக் கிடைத்துள்ள இந்த அமைச்சர் பதவியை, ஒரு நன்றிக்கடனாகவே ராஜ்மோகன் பார்க்கிறார்.. அரசியல் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல், அவமானங்களைச் சந்தித்த அம்பேத்கரின் கொள்கைகளைத் தனது கேடயமாகக் கொண்டு, அதிகாரமற்றவர்களின் குரலாக ஒலிக்க ராஜ்மோகன் இப்போது தயாராகிவிட்டார்.. சாதாரணப் பின்னணி கொண்ட ஒருவரை அமைச்சராக்கியதன் மூலம், தமிழக அரசியலில் தான் சொல்லிய "மாற்றத்தை" விஜய் இப்போதே தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+