பகலில் வெயில்.. நள்ளிரவில் பெய்யும் மழை.. ஜில்லென மாறிய வானிலை.. மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்
சென்னை: பகலில் சுள்ளென வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் ஜில்லென மழை பெய்வதால் சென்னை பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குளு குளு சீசன் போல குளிர் காற்று வீசுவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வடதமிழகம் பகுதியில் நிலவுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிற்கும் மேல் அடுக்கிற்கும் இடையிலான நிலைத் தன்மை குறைந்து இடி மழைக் கூட்டங்கள் உருவாகி மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து கடற்பகுதி அருகே வலுப்பெற்றது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்திலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக ஜமீன் கொரட்டூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டரை விட 6 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் நள்ளிரவில் சென்னை சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, புளியந்தோப்பு, எழும்பூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நேற்று பகல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் திடீரென இரவில் மழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications