சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேசன்கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுங்க - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்க கூடிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தின் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய இடம் உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றமும் வெளிமாநில தொழிலாளர்கள் உரிய வசதிகள் செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

Migrant workers case: Madras High Court order TamilNadu government

இந்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்பட வில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அமர்வில் முறையிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர், தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது என்றும், அதேபோல ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய தொழிலாளர்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மேற்கு வங்க அரசு ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்..இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தைப் பொறுத்த அளவு விவசாயத் தொழிலுக்கு கூட வெளிமாநில தொழிலாளர்கள் நம்பித்தான் இருக்கவேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தனர். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது என்ற சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர். பல நிறுவனங்கள் வெளிமாநில தொழிலாளர்கள் நம்பித்தான் செயல்படுவதாகவும், அவர்கள் இல்லாததால் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

"அன்னைக்கு கொலை.. இப்ப கடத்தல்.. கேரள கம்யூனிஸ்ட் ஜனநாயகத்தின் சாபக்கேடு".. எச்.ராஜா காட்டம்

தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

English summary
State government provide to relife fund and food for migrant labourers the Madras high court order. Advocate AP Suryaprakasam submitted that based on the habeas corpus petition filed by him, the court had on May 15 mandated the responsibility on the State government to provide food and shelter to all the migrant labourers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X