OTA நிலத்தை ராணுவம் எந்த காலத்திலும் தராது.. பல்லாவரம் பாலம், நங்கநல்லூர் மெட்ரோ கதை தெரியுமா?
சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக பாதுகாப்புத் துறையின் OTA நிலத்தை பயன்படுத்தி, அதற்கு ஈடாக பாரந்தூர் நிலத்தை பரிமாற்றம் செய்யலாம் என்று தவெக அரசு விவாதித்தாக பல்வேறு தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இது பற்றி விவாதித்த நடைமுறை சிக்கல்கள் ஊடகவியலாளர்கள் பலருக்குமே தெரியாது. பல்லாவரம் பாலம் , நங்கநல்லூர் மெட்ரோ போன்றவை இதற்கு சிறந்த உதாரணம்.
நேற்று பிரபல தமிழ் நாளிதழில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான நிலம் குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்திகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்பட இருந்த சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தை, தமிழக அரசு கைவிட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொழில் துறை, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்களாம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு, பரங்கிமலையில் உள்ள ஓ.டி.ஏ., எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி இடத்தை பெறவும், பயிற்சி அகாடமியை நவீன கட்டமைப்பு வசதிகளுடன் பரந்தூருக்கு மாற்றவும், அரசு பரிசீலித்து வருகிறது என்றும் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

உண்மையில் 0ta நிலத்தை வாங்கி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் பல ஆண்டு போராட்டமாகவே இருந்தது. ஆனால் அதற்கு ஒருக்காலும் ராணுவம் சம்மதிக்கவே இல்லை. ராணுவம் இந்த இடத்தை மாற்ற எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளாது என்பது பலருக்கும் தெரியும். வேறு வழியே இல்லை என்கிற நிலையில் தான் அதிமுக மற்றும் திமுக அரசுகள் பரந்தூர் பக்கம் போய் விமான நிலையத்தை வைக்க முடிவு செய்தன.
ஆனால் இப்போது பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், முதல் விஜயின் விருப்பப்படி சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டங்கள் நடந்து வருகிறது . ஆனால் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய போதுமான இடம் இல்லவே இல்லை. அரசு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பொழிச்சலூர் பகுதியில் நிலத்தை கையகப்படுத்த வேண்டியது இருக்கும். மக்கள் அதிகம் வாழும் மிக அடர்த்தியான பகுதி அது. அங்கு நிலம் கையகப்படுத்துவது என்பது வாய்ப்பே இல்லை. விமான நிலையத்தின் எதிரே உள்ள பகுதி திரிசூலம் மலை அங்குமே ஒன்றும் செய்ய முடியாது . பக்கத்தில் உள்ள ota நிலத்தை வாங்கி செய்யலாம் என்று நினைப்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பல்லாவரம் பாலத்தை அதற்கு உதாரணமாக கூறுகிறார்கள். பல்லாவரம் பாலம் ஏன் ஒரு பக்கம் உள்ளது இன்னொரு பக்கம் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. மேம்பாலம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மூன்று பெரிய வாகனங்கள் கூட ஒழுங்காக செல்ல முடியாத அளவுக்கு அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இன்றும் பலருக்கு தெரியாது . அது கிட்டத்தட்ட ஒரு வழி பாதை மேம்பாலமாகவே அமைக்கப்பட்டது. அப்படித்தான் பல ஆண்டுகளாகவே அது இருந்து வந்தது. அதற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அந்த நிலம் ராணுவத்தின் வசம் உள்ள நிலமாகும். அந்த நிலத்தை ராணுவம் கொஞ்சம் வெறும் 700 அடிக்கு தந்திருந்தால் பாலம் மிகப்பெரிய அளவில் வந்திருக்கும் பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி அமைந்திருக்கும். அதற்கு இராணுவம் அவ்வளவு எளிதாக இடத்தை தரவே இல்லை. அப்படி இருக்கும்போது மொத்த நிலத்தையும் ராணுவம் எப்படி தரும். ராணுவ பயிற்சி மையத்தை பிரதமர் மோடியை நினைத்தாலும் அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. இந்த இடம் எல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும். எனது அரசு விருப்பத்திற்கு ஏற்ப அந்த இடங்களிலும் அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது.
பல்லாவரம் பாலம் மட்டுமல்ல நங்கநல்லூர் மெட்ரோவும் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்கிறார்கள் நெட்டிசன்கள். நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்து சென்றால், ஒரு பக்கம் இறங்கு பாதை இருக்காது.. ஒரு பக்கம் மட்டுமே இறங்கு பாதை இருக்கும். ஏன் எதிரே இறங்கு பாதை இல்லை. அது பாதியில் கட் ஆகி இந்த பக்கம் வந்தது என்று யோசித்தாலே ஏன் இந்த சிக்கல் என்பது நமக்கு புரியும். அங்கு நிலம் தரப்படவில்லை. அதனால் தான் ஒரு பக்கம் மட்டும் மெட்ரோவிற்கு பாதை உள்ளது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
