மில்லியன் கணக்கில் வியூவ்ஸ்.. சீமானை மெர்சல் ஆக்கிய விஜய்?: இது ஹைப்பா? அல்லது ஆதரவா?
சென்னை: திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி சமூக ஊடகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்திருக்கிறது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்காகப் பத்திரிகையாளர் சந்திப்போ அல்லது ஊடகத்தைச் சந்தித்து விளக்கமோ அவர் இதுவரை அளிக்கவே இல்லை. கட்சி தொடங்கிக் கிட்டத்தட்ட 10 மாதங்களைக் கடந்த நிலையில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தவே இல்லை. ஆனால், அதற்கு முன்பே கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்.

சொல்லப் போனால் எக்ஸ் வலைத்தளத்தை வைத்தே கட்சியை உருவாக்கி முதல் அரசியல் கட்சியாக தவெகதான் இருக்கிறது. கடந்த 2022 ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு யூடியூப் செயல்பட்டு வந்தது. அது இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான சேனலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வலையொளியை சுமார் லட்சத்து 21 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இதுவரை 32 வீடியோக்கள் தான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 6 நாட்கள் முன்னதாக விக்கிரவாண்டி மாநாட்டில் கட்சியில் கொடி விளக்கம் வீடியோ பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை இதுவரை சுமார் 1லட்சத்து 16 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். கொள்கை தலைவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோவை 69 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர். அதேபோல் கட்சியின் பெருக்கு என்ன விளக்கம்? அதை வைத்ததற்கான நோக்கம் என்ன? என்பது குறித்த பதிவை 71 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி கட்சியில் கொள்கைப் பாடலை இதுவரை 1.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 8 நாட்களில் எட்டப்பட்டுள்ளது. கொடிப் பாடல் கடந்த 2 மாதங்கள் முன்னதாக ஒன்றை விஜய் பனையூரில் வெளியிட்டிருந்தார். அப்போதுதான் அவர் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ இதுவரை 6.6 மில்லியன் வியூவ்ஸ் போய் உள்ளது. இப்படி இந்த சேனலில் பதிவேற்றப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் கூட சுமார் 1 லட்சம் முதல் 50 ஆயிரம் வரை பார்வையாளர்களைச் சென்று சேர்ந்துள்ளன.
இதற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் சீமான் பேச்சுகள் அல்லது அவரது அரசியல் கூட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்ற கட்சித் தலைவர்களைவிட ஆயிரக் கணக்கில் பார்வையாளர்களைப் பெறும். அந்த இடத்தில் முதல்வர் ஸ்டாலினோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ இருந்ததே இல்லை. ஸ்டாலின் வீடியோ எப்போதாவது வைரலானால் உண்டு. அவர் தனது பெயரில் எம்கே ஸ்டாலின் என ஒரு சேனலை வைத்துள்ளார். அதில் மொத்தமாக இதுவரை 2லட்சத்து 50 ஆயிரம் பேர்தான் பின் தொடர்கின்றனர்.
அதில் இதுவரை 3500 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2013இல் தொடங்கப்பட்ட இந்தச் சேனல், இதுவரை மில்லியன் வியூவ்ஸ் தொட்டதில்லை. ஆயிரம் அல்லது பத்தாயிரம் என்ற அளவில்தான் பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கின்றன.

ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வலையொளியை 5 லட்சத்து 68 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதுவரை 7600க்கும் மேல் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது 2014இல் தொடங்கப்பட்டுள்ளது. இதிலும் கூட மில்லியன் வியூவ்ஸ் போகவில்லை. மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது சீமானின் வீடியோக்கள் லட்சங்களைத் தொட்டுவிடுகிறது. ஒரு கணிசமான பார்வையாளர்களை இவர் தக்கவைத்துள்ளார்.
ஆனால், இவருக்குப் பின்னால் வந்த விஜய்தான் இப்போது சமூக ஊடகமான யூடியூப் பக்கத்தில் அதிகம், பார்க்கப்படும் தலைவராக இருக்கிறார். இன்றைய தேதியில் ஊடகங்கள் விஜய்க்கு அதிக கவனம் அளிப்பதால்கூட இந்தளவுக்குப் பார்வையாளர்களை அவர் அதிகம் பெற்றிருக்கலாம். இன்னும் சில ஆண்டுகளைக் கடந்தால்தான் இவரின் மீது உள்ளது எதிர்பார்ப்பா? அல்லது சினிமா மோகமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியும்.
இப்போதைக்கு அவரது தொழில் நுட்ப அணி கொஞ்சம் அல்ல அதிகம் ஆக்டிவ் ஆகவே இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு வீடியோக்களின் வியூவ்ஸ் மூலம் நமக்கான பொருள் விளங்குகிறது.
-
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications