Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர் குரலில் பேசி கேசட்! பல உயிர்களை காப்பாற்றிய மிமிக்ரி சேதுவின் தந்தை குரல்.. உருக்கம்

தனது தந்தை குறித்த நினைவலைகளை பகிர்ந்த மிமிக்ரி கலைஞர் சேது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் பேசி பல உயிர்களை காப்பாற்றியவர் தனது தந்தை என்பதை பெருமிதம் பொங்க சொல்லியுள்ளார் மிமிக்ரி கலைஞர் சேது.

விஜய் டிவியில் ராமர் வீடு என்ற நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர் மிமிக்ரி சேது. இவர் மற்றவர்களை தனது மிமிக்ரி ஆற்றல் மூலமாக சிரிக்க வைப்பவர். இவர் கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வந்தார்.

மிமிக்ரி என்றால் மற்றவர்களை போல் குரலை மாற்றி பேசுவது. அந்த வகையில் ரஜினி, எம்ஜிஆர், கமல், சிவாஜி தொடங்கி விஜய் சேதுபதி , இயக்குநர் லோகேஷ் வரை பலர் மிமிக்ரியில் புகுந்து விளையாடி வருகிறார்கள். அது போல் பல மிருகங்களின் குரல்கள், பறவைகளின் சப்தம், இசைக் கருவிகள் இல்லாமலேயே தொண்டையிலிருந்து வரும் சப்தத்தால் வாசிப்பது உள்ளிட்ட நிறைய திறமைகளுடன் பல இளைஞர்கள் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மிமிக்ரி சேது

மிமிக்ரி சேது

இந்த வகையில் மிமிக்ரி சேது அரிய குரலான வி.எஸ். ராகவன் குரலை எடுத்து பேசினார். அது முதல் அவருக்கு நிறைய ரசிகர்கள் குவிந்துவிட்டனர். அது போல் பல நடிகர்களுக்கு இவர் பின்னணியும் பேசி வருகிறார். கட்டப்பாவ காணோம் படத்தில் சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் சேது சுப்பிரமணியம்.

மிமிக்ரியில் புகழ்

மிமிக்ரியில் புகழ்

இவர் மிமிக்ரியில் புகழடைந்த பின்னர் மிமிக்ரி சேதுவாக அழைக்கப்பட்டார். இவரது தந்தையும் மிமிக்ரி கலைஞர்தான். அவரது பெயர் சிவகங்கை சேதுராஜன், பல குரல் மன்னனாக அறியப்பட்டார். இவர் இன்றிருக்கும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் பரிட்சயம். இவர் 1970 களிலிருந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் என சொல்கிறார்கள். தனது இறுதி காலத்தில் அதிமுகவுக்காக சிவகங்கை சேதுராஜன் உழைத்தார்.

சிவகங்கை சேதுராஜன்

சிவகங்கை சேதுராஜன்

இந்த நிலையில் சிவகங்கை சேதுராஜன் குறித்து ஒரு விஷயத்தை அவருடைய மகன் சேது கலக்க போவது யார் நிகழ்ச்சிகள் மிகவும் உருக்கமாக தெரிவித்தார். அந்த வகையில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை சேதுராஜனிடம் இருந்துதான் எனக்கு பல குரல் பேசும் ஆர்வம் அதிகரித்தது. அவருடைய அருளால் நான் இந்த அளவுக்கு பெயரும் புகழும் பெற்று வருகிறேன். மிமிக்ரியை எனது தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குரல் வளத்தை பார்த்து பார்த்து எனக்கு மிமிக்ரியில் ஈடுபாடு அதிகரித்துவிட்டது.

தந்தை

தந்தை

என் தந்தை ஒரு முறை செய்த செயல் பலரது உயிரையும் காப்பாற்றியது. என்னாது மிமிக்ரியால் உயிரை காப்பாற்ற முடியுமா என நீங்கள் யோசிப்பீர்கள். என் தந்தை அதிமுகவில் இருந்த காலம் அப்போது எம்ஜிஆர் உடல்நல பிரச்சினைக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றிருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் எம்ஜிஆர் இறந்துவிட்டதாக சில விஷமிகள் பொய் செய்தியை பரப்பினர்.

எம்ஜிஆர் ரசிகர்கள்

எம்ஜிஆர் ரசிகர்கள்

இதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் மன வேதனை அடைந்தனர். எம்ஜிஆர் தெய்வமாக வணங்கும் பலர் எம்ஜிஆரின் இறப்பை அறிந்து நடைப்பிணங்களாயினர். எம்ஜிஆர் இல்லாத இந்த உலகில் இனி வாழ மாட்டோம் என கூறி பலர் தற்கொலை செய்து கொண்டனர். இப்படி தினந்தோறும் எண்ணற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போதுதான் அதிமுக அமைச்சரவையில் இருந்த ஒருவர் எனது தந்தையை அழைத்தார். எனது தந்தையிடம் "நான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். பூரண நலத்துடன் இருக்கிறேன். நான் விரைவில் வந்து உங்களை சந்திக்கிறேன், நான் உயிரிழந்ததாக கூறும் தகவல் பொய்யானது, யாரும் அதை நம்ப வேண்டாம்" என எம்ஜிஆர் குரலில் பேசி ஒரு கேசட்டை அனுப்புங்கள் என கூறினார்.

கேசட்

கேசட்

எனது தந்தையாரும் அதே போல் பேசி அந்த கேசட்டை அனுப்பினார். இதையடுத்து அந்த கேசட் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டது போல் கூறி அந்த கேசட்டை டிவி, ரேடியோக்களில் ஒலிபரப்பினர். மேலும் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் ஒலிப்பரப்பினர். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை வேரோடு அழித்தனர். எம்ஜிஆர் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையுடன் புத்துணர்ச்சியோடு இருந்தனர். இது அதிமுக நிர்வாகிகளுக்கு நிம்மதியை தந்தது என உருக்கமாக சேது தெரிவித்தார். சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஆரால் பேச முடியாது என்பதால் பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை அரசுக்கு இருந்ததால் இது போல் சேதுராஜனை வைத்து அதிமுக நிர்வாகிகள் பல உயிர்களை காப்பாற்றினர்.

மிமிக்ரி கலைஞர்

மிமிக்ரி கலைஞர்

இப்படியாக மிமிக்ரி என்ற ஒரு கலையானது தன்னை மட்டுமல்லாமல் பிறரையும் காப்பாற்றியது. அதிமுக கடுமையாக உழைத்த சேதுராஜனுக்கு சென்னை சிஐடி காலனியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அந்த வீட்டில் சேதுராஜன் கடைசி காலம் வரை வசித்து வந்தார். சேதுராஜனின் காலத்திற்கு பிறகு இந்த வீட்டில் சேது சுப்பிரமணியனும் அவருடைய சகோதரர் கணேசனும் வாடகைக்கு குடியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அந்த வீட்டை வீட்டு வசதி வாரியம் இடித்தது. தனது தந்தை இருந்த வீட்டை புல்டோசர் வைத்து இடித்துவிட்டார்களே என சேதுவும் கணேசனும் கதறினர். 50 ஆண்டுகளாக அந்த வீட்டை இந்த சகோதரர்கள் நன்கறிந்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்கள் இருவரும் கலங்கி நின்றனர். எனினும் சேது அதிலிருந்து மீண்டு இன்று பல மிமிக்ரி கலைஞர்கள் உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+