மைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரனின் தாறுமாறு திட்டம்.. மஹாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.. அமித்ஷாவுக்கு எதிரான அலேக் அரசியல்...

ஹோல்ட் ஆன் மன்னாரு ஜி.. என்ன இது தலைப்புச் செய்தியெல்லாம் தாறுமாறா இருக்கு.. அதுக்கு நான் என்னடா பண்றது தம்பி.. போற போக்கைப் பார்த்தா இதெல்லாம் கூட நடந்தாலும் நடக்கலாம்டா.

யாருண்ணே.. வேற யாரு நம்ம தினகரன்தான்.. அது சரி மகாராஷ்டிராவில் போட்டியிட்டா இங்க எப்படி தலையெடுக்க முடியும்.. இதெல்லாம் இதுவரை நடக்கலை.. தைரியமா இரு.. அதை விடு.. நம்ம செல்லூர் ராஜு மேட்டர் தெரியுமா.. அதைத்தான் சொல்ல மாட்டேங்கறீங்களே.. இன்னிக்கு சொல்லிருக்கேன் போய்ப் பாரு..

பாஜகவுக்கு பயம்

பாஜகவுக்கு பயம்

ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சி.பி.ஐ. சென்றது, பா.ஜ.க.வின் பயத்தைக் காட்டுகின்றது. அவர்களின் நடுக்கம், தெளிவாய் புரிகிறது: குஷ்பூ (அப்படிங்கலாங்க அக்கா! முன் ஜாமீனானது ‘கடல்லேயே இல்லையாம்'ன்னு ரிசல்ட்டு வந்ததும், தன்னோட வீட்டுலேயும் இல்லாம, எங்கே இருக்கேன்னும் சொல்லாம ஒரு அரசியல் வி.ஐ.பி. இப்படி தடம் தெரியாம சில மணி நேரங்கள் மறைந்தது எதைக் காட்டுதுங்க?)

வளர்ச்சி இல்லையே

வளர்ச்சி இல்லையே

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் எதிர்பார்த்த எந்த வளர்ச்சியையும் பெறவில்லை. தி.மு.க. இந்த மாநிலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய நீண்ட காலம் ஆகும்: பொன்.ராதாகிருஷ்ணன். (சரிங்க தல, ஐந்து வருஷமா மத்தியமைச்சர் பதவியில இருந்தீங்களே அப்போ வேற எங்கேயும் வேண்டாம், கன்னியாகுமரியை நீங்க எந்த அளவுக்கு முன்னேத்துனீங்கன்னு மட்டும் சொல்லுங்க, அது போதும் தல, அது போதும்)

அதை மூடுங்க சாமிஜி

அதை மூடுங்க சாமிஜி

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளை மூடுவதை நிறுத்திவிட்டு, மதுக்கூடங்களை மூட வேண்டும். இந்த மண்ணில் மதுபானக்கடைகளே இல்லை எனும் நிலையை அண்ணாவின் அடிச்சுவட்டில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டும்: குமரி அனந்தன். (தலைவரே செம்மத்தியான டயலாக் விட்டிருக்கீங்க, வாழ்த்துக்கள். காங்கிரஸின் அரசியல் எதிரியான அ.தி.மு.க.வை இப்படி செய்யச் சொல்றதை விட, காமராஜரின் அடிச்சுவட்டில் ஆட்சி நடத்தும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை முதலில் மதுக்கடைகளை மூட சொல்லலாமே? தமிழ்நாட்டுல புழங்குறதுல பெருமளவு புதுவை சரக்குதான்னு உங்களுக்கு தெரியாதா?)

திருப்பி திருப்பி

திருப்பி திருப்பி

சில திட்டங்களுக்கான நிதியை பயன்படுத்த முடியாத சூழலில் அதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்படும். இது வழக்கமான ஒன்றுதான். அதில் தவறு ஏதும் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ. (சமாளிக்கிறதுலேயும் ஒரு நியாயம் அநியாயம் வேணாமாண்ணே, இங்க பல கோடி சனம் சோத்துக்கு வழியில்லாம செத்துட்டு இருக்குது. இந்த நிலையில பணத்தை திருப்பின் அனுப்பிச்சது மட்டுமில்லாம, அதுக்கு ஒரு வெளக்கம் வேற கொடுத்து வேதனையை கெளப்புறீகளே?)

நாங்க ரெடி.. நீங்களும் ரெடியாங்க

நாங்க ரெடி.. நீங்களும் ரெடியாங்க

கட்சியை பதிவு செய்யும் முயற்சி நிறைவடைந்தது. பொது சின்னம் கிடைத்தால், நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்: தினகரன் (என்னண்ணே கட்சியை பதிவெல்லாம் பண்ணிட்ட, பொது சின்னம் வேற கேட்குற, ஒரு ட்ரீட்டு இல்ல, விருந்து இல்ல. அதென்ன நாங்குநேரி இடைத்தேர்தல்? உன் கெத்துக்கு மஹாராஷ்டிரா பொதுத்தேர்தல்லேயே நின்னு அமித்ஷாவை தெறிக்க விடலாமே?)

- ஜி.தாமிரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+