மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. என்னண்ணே ஷேக் சொன்னதை இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே...!
சென்னை: இன்னிக்கு வெயில் கொஞ்சம் கொறச்சலாதான் இருக்கு.. ஆனால் மழையைத் தான் காணோம்.. மண்டையைச் சொறிந்தபடி வந்தமர்ந்தார் மிஸ்டர் மை.வா. மன்னாரு.
வேலூர் தேர்தல் முடிஞ்சு போச்சு. இதில் ஜெயிச்சது என்னவோ திமுகதான். ஆனால் அதிமுகதான் ஜெயிச்சிருக்குன்னு தமிழிசை முதல் ஜெயக்குமார் வரை அடிச்சுச் சொல்லிட்டிருக்கும்போது அதை ஆணித்தரமாக மறுத்து நாங்கதாய்யா ஜெயிச்சோம்னு சொல்ல முடியாமல் திமுகவினர் வேறு வேலைகளுக்குப் போய் விட்டனர்.
மறுபக்கம் ரஜினியை வைத்து ஒரு குரூப் கட்டி உருண்டு கொண்டிருக்கிறது. சரி வாங்க நாம நம்ம வேலையைப் பார்ப்போம்...

சிறு வித்தியாசம்தானே
வேலூர் லோக்சபா தேர்தலில் பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்வோம்ன்னு ஸ்டாலின் சொன்னார். ஆனால் வெறும் எட்டாயிரத்து நூற்று நாற்பத்தியோறு வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி. (தலைவரே அவங்க வென்றுட்டாங்க. அதுவும் மத்திய அரசோட பூரண ஆசியோட உங்க கவர்மெண்ட் நடந்துட்டு இருக்குறப்பவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், வேலூர் லோக்சபா தேர்தல்ன்னு அடிச்சு தூள் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நாம?)

அண்டா வேண்டாம்
தி.மு.க.தான் பேரிடர் காலங்களில் மக்களை தேடி சென்று, நிவாரண பணிகளை காலத்தே செய்கிறது! என மக்கள் அடையாளம் காட்டும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தி.மு.க. நிர்வாகிகள் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின். (எதிர்கட்சி தலைவரே, உங்க எண்ணம் உன்னதமான எண்ணம். அதே நேரத்துல நிவாரண முகாமில் உள்ள மக்களுக்கு ஆக்கிப்போடுறேன்னு சொல்லிட்டு உங்காளுங்க யாரும் அங்கே அண்டாவை தூக்கிட்டு போயி சர்ச்சையில சிக்கிக்க கூடாதுன்னும் எக்ஸ்ட்ரா ஒரு ஆர்டர் பிட்டை போட்டுவிட்டுடுங்க. எல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றோம். அப்புறம் உங்க இஷ்டம்)

தப்பு அவரோடதா
வைகோவுக்கு பார்லிமெண்டில் பேச ஏழு நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் அவர் ஆறு நிமிடங்கள் காங்கிரஸை தாக்கிப் பேசியுள்ளார். வைகோ டில்லிக்கு சென்று காங்கிரஸ் எம்.பி.க்களை சந்திப்பதை விட பி.ஜே.பி. எம்.பி.க்களுடன் தான் அதிகம் பேசுகிறார், பழகுகிறார். அவருக்கெல்லாம் காங்கிரஸை குறை கூற அருகதையே இல்லை: கோபண்ணா. (அண்ணே, பார்லிமெண்டுல எங்குட்டு திரும்பினாலும் பி.ஜே.பி. எம்.பி.க்களா நிக்குறாய்ங்க. உங்க கட்சி ஆளுங்களை திருவிழா கூட்டத்துல தொலைஞ்ச புள்ளையாட்டமா தேட வேண்டி இருக்குது. உங்க கட்சி அதிகமா ஜெயிக்காத குத்தத்துக்கு வைகோவை திட்டுறது சரியா?)

எப்படி முழிப்பாரு
யார் எவ்வளவு வசை பாடினாலும் பரவாயில்லை. ஜம்மு - காஷ்மீர் விஷயத்தில் அன்றே வரலாற்றுப் பிழை செய்தது காங்கிரஸ்தான். காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன், அப்போது ‘காங்கிரஸ் ஒரு நன்றியில்லாத கட்சி' என்றார். அவர் சொன்னதைத்தான் பார்லிமெண்டில் குறிப்பிட்டேன்: வைகோ. (அண்ணே, ஷேக்கு உங்க கிட்ட பர்ஷனலா சொன்ன விஷயத்தை இப்படி கோவில்பட்டி கடலைமுட்டாய் பாக்கெட்டை பிரிச்சு, ஆளுக்கு ஒரு பீஸ் கொடுக்குற மாதிரி உடைச்சுட்டீங்களேண்ணே! இனி காங்கிரஸ்காரங்க மூஞ்சியில ஷேக்கு எப்படி முழிப்பாரு ஷோக்கா?)
- ஜி.தாமிரா
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications