Mini AC Bus: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி ஏசி பஸ்! எங்கெல்லாம் பயணிக்கும்?
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தமிழக ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மெட்ரோ நிலையங்களிலிருந்து மினி ஏசி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு!

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான இணைப்பை (First and Last Mile Connectivity) உறுதி செய்யும் நோக்கில், மினி ஏ.சி. மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் (Metropolitan Transport Corporation - MTC) முடிவு செய்துள்ளது.
திட்டத்தின் பின்னணி: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, தற்போது சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு விமான நிலையம் - விம்கோ நகர் மற்றும் சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடங்களில் இயங்கி வருகிறது.
சேவையின் நோக்கம்: பொதுமக்களின் வசதிக்காக, ஏற்கெனவே இலவச சைக்கிள், வாடகை பைக், ஆட்டோ போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மெட்ரோ நிலையங்களிலிருந்து அருகிலுள்ள பகுதிகளை இணைக்க மினி பஸ் சேவை தொடங்கப்படுகிறது.
பேருந்துகளின் விவரம்:
*மொத்த எண்ணிக்கை: 220 புதிய மினி பேருந்துகள்.
*வகை: ஏ.சி. மின்சாரப் பேருந்துகள்.
*நீளம்: 6 மீட்டர் நீளம் கொண்ட சிறிய ரகப் பேருந்துகள்.
*இயக்க முறை: ஒப்பந்த அடிப்படையில் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
பயன்படுத்தப்படும் நிலையங்கள்: இந்த மினி பஸ்கள் 11 மெட்ரோ ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இயக்கப்படும்.
இந்த ஏ.சி. மின்சாரப் பேருந்து சேவையால், மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என்றும், பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோவின் வளர்ச்சி: மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் (கடந்த ஏப்ரல் வரை), 39 கோடி முறை மக்கள் பயணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications