பார்த்துக்கோங்க பாஸ்.. டோஸ் விட்ட அமித் ஷா.. தமிழ்நாடு "புள்ளிக்கு" ஏகப்பட்ட அட்வைஸாமே? உண்மையா?
சென்னை: சமீபத்தில் சென்னை வாட்ச் உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக மூத்த தலைவர்களிடம் முக்கியமான ஆலோசனை ஒன்றை செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒருநாள் பயணமாக அமித்ஷா சென்னையில் ஓர் இரவு தங்கி இருந்தார். ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் பங்களாவில் தங்கி ஓய்வு எடுத்தார்.
ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தினார். இரவு உணவுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைச்சர் முருகன், அமைப்புச் செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

அதிமுக, திமுக
இந்த நிலையில் சென்னையில் அவர் நடத்திய மீட்டிங்கில் அதிமுக, திமுக பற்றி கேட்டதாக ஏற்கனவே ஒன் இந்தியா தமிழ் சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அதிமுக உடன் கூட்டணி வைக்கலாமா.. இல்லை இப்போது இருப்பது போலவே இருக்கலாமா என்று அமித் ஷா கேட்டு இருக்கிறாராம். அதேபோல் திமுக ஆட்சியில் இருக்கும் குறைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி இருக்கிறாராம். மேலும் திமுக இருக்கும் தலைகளை இங்கே கொண்டு வர முடியுமா என்றும் கேட்டு இருக்கிறாராம்.

அண்ணாமலைக்கு பாராட்டு
இந்த நிலையில்தான் முக்கிய தலைகள் இருந்த அந்த மீட்டிங்கில் அண்ணாமலைக்கு அமித் ஷா பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அண்ணாமலை கொடுத்த பேட்டிகள், சில முன்னெடுப்புகள், முதல்வருக்கு எதிராக வைக்கப்பட்ட புகார்கள் பற்றி அமித் ஷா பாராட்டியதாக கூறப்படுகிறது. தெலுங்கானாவில் பாஜக தலைவராக இருக்கும் பண்டி சஞ்சய் பார்முலாவைதான் இங்கேயும் பாஜக பயன்படுத்தி வருகிறது.

மத விவகாரம்
அங்கே அரசுக்கு எதிராக அவர் கடுமையாக புகார் அளித்து வருகிறார். முதல்வர் கேசிஆர் மீதான புகார்களை அவர் அடுக்கி வருகிறார். இந்த நிலையில்தான் அதே போல இங்கே அண்ணாமலையும் சிறப்பாக செயல்படுவதாக அமித் ஷா பாராட்டி இருக்கிறாராம். இது போக சமீபத்தில் சில மத ரீதியான விவகாரங்கள், ஆளுநருக்கு ஆதரவாக நின்றது உள்ளிட்ட பல விஷயங்களை பாராட்டினாராம்.. பாஜக இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பிச்சு இருக்கு என்று பாராட்டினாராம்.

ஆனால் கோஷ்டி
அதே சமயம் அமித் ஷா மொத்தமாக பாராட்டு மழையை மட்டும் பொழியவில்லையாம். கட்சிக்குள் கோஷ்டி மோதல் இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. சில நிர்வாகிகள் சரியாக செயல்படுவது இல்லை. டெல்லிக்கு இதை பற்றி புகார் வந்துள்ளது. புதிதாக இன்னும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படவில்லை. இதை எல்லாம் உடனே சரி செய்யுங்கள் என்று கூறினாராம். அதிலும் மூத்த தலைவர் ஒருவருக்கு தனிப்பட்ட வகையில் அட்வைசும் கொடுத்துள்ளாராம். மூத்த தலைவர்கள்தான் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பார்த்துக்கோங்க பாஸ்.. என்று அட்வைஸ் செய்து இருக்கிறாராம்.

தேர்தலுக்கு ரெடியாகுங்க
இது போக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயார் ஆகுங்கள்.. மின்வெட்டு பிரச்னையை கையில் எடுங்கள் என்றும் அமித் ஷா அறிவுரை சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பாஜகவில் கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்வதில் மோதல் இருக்கிறது. அதிமுக, திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் பாஜகவில் அப்படி இல்லை.

உண்மையா?
பாஜகவில் அண்ணாமலை தலைவராக வந்து ஒரு வருடம் ஆக போகிறது. ஆனால் இன்னும் புதிய மாவட்ட நிர்வாகிகள் பெரிதாக தேர்வு செய்யப்படவில்லை. இதைத்தான் அமித் ஷா அட்வைஸாக கூறினார் என்கிறார்கள். இந்த நிலையில் விரைவில் பாஜகவில் மாவட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றப்படலாம். அதற்கான லிஸ்ட் தயாராகி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications