அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்?.. அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏராளமான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளி, தனியார் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்துப் பள்ளி மாணவர்களுக்குமான அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் தென்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அண்மையில் அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும். பின்னர், ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகல் திறக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவம் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், பெஞ்சல் புயல் காரணமாக மழை பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்த முடியவில்லை. அந்த மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வை ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் அரையாண்டு தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை.
மழை காரணமாக அதிக பாதிப்பை சந்தித்துள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு முடிந்த பின்னர் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications