அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா உறுதி.. சுகாதாரத் துறை!
சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சளியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. புதுவையில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

காய்ச்சல்
இந்த நிலையில் இந்த காய்ச்சல் அதிகரிப்பால் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு காய்ச்சல் தீவிரமக இல்லை என அமைச்சர்கள் மா சுப்பிரமணியனும் அன்பிலும் தெரிவித்திருந்தனர்.

தலைமைச் செயலகம்
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.

பரிசோதனை
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை இரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்பேரில் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்த பரிசோதனை
அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரல் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இன்புளூயன்சா காய்ச்சல்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அவருக்கு இன்புளூயன்சா வைரஸ் இருப்பது தெரியவந்தது. தற்போது அன்பில் தனிமையில் இருக்கிறார். அவரது உடல் சீராக உள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார். நேற்றைய தினம் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications