உலக விண்வெளி வார விழா! மாணவர்கள் வடிவமைத்த வெல்கம் ரோபோ! அசந்து பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
செங்கல்பட்டு: உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் தனியார் பொறியியல் கல்லூரியில், இஸ்ரோ விண்வெளி அறிவியல் கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, சர்வதேச சமூகத்திற்கு கல்வி கற்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் தனியார் பொறியியல் கல்லூரியில். உலக விண்வெளி வார விழாவை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

விண்வெளி வார விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக விண்வெளி வார விழா மற்றும் இஸ்ரோ கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இஸ்ரோ நிறுவனத்தின் துணை இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மேலும், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இக்கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த வெல்கம் ரோபோவை, அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். மேலும், அந்த ரோபோ வழங்கிய பூங்கொத்தையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

ராக்கெட் ஏவுதளம்
இக்கல்லூரியில் இன்று முதல் வரும் 9- ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் ஏவுதளம் பற்றி கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மற்றும் மாதிரிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

செய்முறை விளக்கம்
இந்த விண்வெளி அறிவியல் கண்காட்சியை, இக்கல்லுரியை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இதனை வடிவடிவமைத்த கல்லுரி மாணவர்கள் செய்முறை விளக்கமும் அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications