அதிமுக வெற்றி பெற்ற வார்டு அன்பில் மகேஷ் வசம்! சவாலே சமாளி! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ருசிகரம்!
கட்சிப்பணி, ஆட்சிப்பணி என இரண்டிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் கவனம்.
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் என நான்கு மாவட்டங்களிலும் சுற்றிச் சுழன்று வருகிறார்.
ஈரோடு மாநகராட்சியில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே வார்டு அன்பில் மகேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அதனை சேலஞ்சாக எடுத்துக் கொண்டிருக்கிறார் அவர்.
கட்சிப்பணி, ஆட்சிப்பணி என இரண்டிலும் தன்னை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ளக்கூடியவர் அன்பில் மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சலிக்காமல் பயணம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை களமிறக்கி தேர்தல் பணிகளை கவனித்து வரும் அவர், பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் தஞ்சைக்கும், மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் திருச்சிக்கும் துறை சார்ந்த பணிகளை தேக்கமடைய வைக்கக் கூடாது என்பதற்காக சென்னைக்கும் மாறி மாறி சலிக்காமல் பயணித்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளில் 15 வார்டில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு
அப்படி அதிமுக வெற்றிபெற்றுள்ள அந்த வார்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு தேர்தல் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் இருந்தாலும், திருச்சியில் இருந்தாலும் தேர்தல் பணிகள் எப்படி போகிறது, எத்தனை வீடுகளில் வாக்கு சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை அங்கிருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் அலைபேசி மூலம் நாளொன்றுக்கு இரண்டு முறையாவது கேட்டறிந்து கொள்கிறார்.

வீடு வீடாக பிரச்சாரம்
அதேவேளையில் ஈரோடு சென்றால் அங்கு தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறார். இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த சுற்றுப்பயணங்களால் அவரை எங்கே சென்றால் பார்க்க முடியும் எனத் தெரியாமல் கட்சியினர் பலர் தவிப்பது தான். அந்தளவுக்கு கட்சிப்பணி, ஆட்சிப்பணி என இரண்டிலும் தன்னை எப்போதும் பிசியாக வைத்துக் கொள்கிறார்.

இளைஞர்கள்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வமுடன் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றி வருவது கவனிக்கத்தக்கது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications