சாரண சாரணியர் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு! எங்கோ கேள்விப்பட்ட மாதிரி பெயரா? ஹெச்.ராஜாவா?
சென்னை : தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் உள்ளது . இந்த அமைப்பின் தலைவர், து.தலைவர் உள்ளிட்டப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
பள்ளியில் படிக்கும் போதே கீழ்ப்படிதல் ராணுவம் போன்ற பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகள் மற்றும் திறன்களை வளர்க்கும் விதமாக சாரணர் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

சாரணர் தேர்தல்
மாவட்ட அளவில் நடக்கும் சாரணர் முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சாரணர்கள் என்றும் மாணவிகள் சாரணியர் என்றும் அழைக்கப்படுகின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த பேடன் பவுல் இந்த இயக்கத்தை தோற்றுவித்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் இந்த அமைப்பு பரவி இருக்கிறது. மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆளுநரும், இந்திய அளவில் குடியரசு தலைவரும் விருது வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்த இயக்கத்திற்கான தலைமையகம் சென்னை மெரினா கடற்கரை அருகே இருக்கும் நிலையில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தி தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். இந்நிலையில் தற்போது சாரணர் இயக்கத்தின் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த இயக்கத்தின் இயக்க புரவலராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். காரணம் கடந்த கடந்த முறை சாரணர் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக எச்.ராஜா
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பாஜகவின் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நிறைவுற்ற உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.ராஜா வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications