“பப்ளிக்”.. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 க்கு எந்த நாளில் என்ன பாடத்தேர்வு? முழு அட்டவணை இதோ
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளார். எந்தெந்த நாட்களில் என்னென்ன பாட தேர்வுகள் நடைபெற உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டு உள்ளார்.

10 ஆம் வகுப்பு: செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 29 வரை நடைபெறும். மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும். மார்ச் 26 - தமிழ், மார்ச் 28 - ஆங்கிலம், ஏப்ரல் 01 - கணிதம், ஏப்ரல் 4 - அறிவியல், ஏப்ரல் - 6 விருப்ப மொழித் தேர்வு, ஏப்ரல் 8 - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
11 ஆம் வகுப்பு: செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 வரை நடைபெறும். மார்ச் 04 ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி நிறைவடையும். மார்ச் 04 - மொழிப்பாடம், மார்ச் 3 - ஆங்கிலம், மார்ச் 12 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மார்ச் 14 - புள்ளியியல், கணினி அறிவியல், மார்ச் 18 - உயிரியல், வரலாறு, வணிக கணிதம், மார்ச் 21 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
12 ஆம் வகுப்பு: செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும். மார்ச் 01 ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு மார்ச் 22 ஆம் தேதி நிறைவடையும். மார்ச் 01 - மொழிப்பாடம், மார்ச் 5 - ஆங்கிலம், மார்ச் 8 - கணினி அறிவியல், உயிரி - அறிவியல், புள்ளியியல், மார்ச் 11 - வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல், மார்ச் 15 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மார்ச் 19 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 06 ஆம் தேதி வெளியிடப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications