சென்னைக்கு செல்வதையே வெளிநாடு செல்வது போல் நினைத்தேன்! மனம் திறந்த அன்பில் மகேஷ்!
சென்னை: சென்னைக்கு செல்வதையே வெளிநாட்டுக்கு செல்வது போல் ஒரு காலத்தில் தாம் நினைத்ததாக மனம் திறந்து பேசியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Recommended Video
மேலும், சென்னையில் சாலையோரக் கடையில் தொடங்கி பெரிய ஹோட்டல்கள் வரை பல உணவுகளை ருசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தினம் கொண்டாடப்படும் வேளையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனைக் கூறினார்.

சென்னை தினம்
வந்தாரை வாழ வைக்கும் சென்னையை கொண்டாடும் வகையில் சென்னை தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சினிமா, அரசியல் என பலதுறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது முன்னேற்றத்துக்கு சென்னை எந்தளவு கை கொடுத்து உதவியது என கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னைக்கும் தனக்குமான தொடர்பு பற்றி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

வெளிநாடு போல்
அதில் அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்வதை வெளிநாடு செல்வதை போல் நினைத்து மகிழ்ந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதேபோல் ஒரு முறை தனது சிறுவயதில் அடையார் பார்க் கேட் நட்சத்திர விடுதியில் சாப்பிட சென்ற போது, நடிகர் ரஜினிகாந்த் தனது பியட் காரில் வந்திறங்கியதும் மின்னல் போல் பிளாக் அண்ட் பிளாக் ஆடையில் அவர் நடந்து சென்றதும் இன்னும் தனது கண்களில் நிழலாடுவதாக தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி -வேதனை
அன்று ரஜினி தன்னை கிராஸ் செய்து செல்லும் போது ஓரமாக நின்று அவரை வேடிக்கை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை தனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது, வேதனையையும் கொடுத்திருக்கிறது எனத் தெரிவித்தார். சென்னையில் பிடித்தமான உணவு என்று குறிப்பிடும் படி தனக்கு எதுவும் இல்லை என்றும், சாலையோரக் கடை முதல் பெரிய ஹோட்டல்கள் வரை சாப்பிட்டிருப்பதாகவும் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

வாரத்திற்கு பல முறை
அன்று சென்னைக்கு செல்வதையே வெளிநாடு செல்வது போல் ஆபூர்வமாக நினைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே ஆட்சிப்பணி, கட்சிப்பணி, தொகுதிப்பணி காரணமாக பறந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications