உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் முதல் குரல்!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுகவில் முதல் குரல் கொடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
உதயநிதியின் திறமை குறிப்பிட்ட ஒரு தொகுதிக்குள் மட்டும் முடங்கிவிடக்கூடாது என அவர் கூறியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த மே மாதமே அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்களான கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் போன்றோருக்கு எல்லாம் அமைச்சரவையில் வாய்ப்பு தந்த ஸ்டாலின் தனது மகனுக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார்.

தொகுதிப்பணிகள்
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தொகுதிப் பணிகளில் ஆர்வமுடன் களமிறங்கி செயலாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது தனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் அதுதான் எனக் கூறியிருக்கிறார்.

உதயநிதி திறமை
உதயநிதி ஸ்டாலினிடம் உள்ள திறமை குறிப்பிட்ட ஒரு தொகுதிக்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்றும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரிடம் உள்ள திறமைகள் பயன்பட வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ.வாக உதயநிதியின் செயல்பாடுகள் ஸ்டாலினின் பாராட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகனுக்கு தந்தை வைத்த ஆறு மாத கால பரீட்சையில் உதயநிதி பாஸ் செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

முதல் குரல்
உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுகவில் எழுந்துள்ள முதல் குரல் அமைச்சர் அன்பில் மகேஷிடம் இருந்து வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்து நிகழவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதிக்கு கேபினட்டில் இடம் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications