கள்ளக்குறிச்சி.. புகை வாடையே இன்னும் போகல! வாட்ஸ் ஆப்பில் அனுப்பியது யார்? அன்பில் மகேஷ் பரபர பேச்சு
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.ஹாஸ்டலில் மாடியில் இருந்து கீழே விழுந்து அந்த மாணவி மரணம் அடைந்தார். ஆனால் இது கொலையா, தற்கொலையா என்ற குழப்பம் நிலவி வருகிறது.
மாணவி பலியான விவகாரம் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நேற்று முதல்நாள் கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரம் நடைபெற்றது.

விளக்கம்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார். அதில், நேற்றே வசந்தன் கார்த்திகேயன் போன்ற எம்எல்ஏக்கள் போய் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கோர்ட் வழக்கு காரணமாக பெற்றோர்களை சந்திக்க முடியவில்லை. நான் எம்எஸ்சி படித்து இருக்கிறேன். ஏதாவது வேலை வாங்கி கொடுங்கள் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீ வைத்தனர்
பரிசீலனை செய்வதாக சொல்லி இருக்கிறேன். உள்ளே பள்ளியில் மேஜைகளுக்கு கூட தீ வைத்துள்ளனர். அதேபோல் டிசி உள்ளிட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துள்ளனர். எல்லா பேருந்தும் தீ வைக்கப்பட்டுவிட்டது. ஏசி, சேரை கூட தூக்கி சென்றுள்ளனர். அதனால் பள்ளியை தொடர்ந்து நடத்த உதவி செய்கிறோம் என்று கூறி இருக்கிறோம். கோர்ட்டும் நேற்று இதைத்தான் சொன்னது. கலவரம் நடத்தியவர்களை கைது செய்தால் மட்டும் போதாது.

வாட்ஸ் ஆப்
அதற்கு காரணமாக இருந்தவர்களை பிடிக்க வேண்டும். வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பரப்பப்பட்ட செய்திகள், அதற்கு காரணமாக இருந்தவர்களை பிடிக்க சொல்லி இருக்கிறது. கண்டிப்பாக இன்று இதை பற்றி பேசுவோம். இன்று காலை முதல்வர் ஸ்டாலினை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சந்திக்க இருக்கிறோம். பள்ளியில் நடந்த விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய உள்ளோம். 3000 மாணவ, மாணவியரின் வாழ்க்கை இது. அதை பற்றி பேசுவோம்.

சர்டிபிகேட்
உள்ளே இருக்கும் சர்டிபிகேட் எல்லாம் எரிந்து போய்விட்டது. இன்னும் புகை வாடை அடிக்கிறது. அங்கு காண்பித்த நபர்கள் எல்லாம் அழுது கொண்டே எங்களிடம் காண்பித்தார்கள். அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இது ஏதோ கோபத்தால் வந்தது போல தெரியவில்லை. கோர்ட்டும் இதைத்தான் சொல்லி இருக்கிறது.

கோர்ட்
திட்டமிட்டு நடத்தப்பட்டது போல இருக்கிறது என்று கோர்ட்டும் சொல்லி இருக்கிறார்கள். ஆவணங்களை உடனே மீண்டும் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளி கட்டிடத்தை சரி செய்ய 1 வாரமாவது ஆகும். அதற்கு இடையில் சிக்கல் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்கள் கல்வி பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications