இது கோடைக்காலம்! வருமானம் வரும் நேரம்! அதிகாரிகள் கடமைக்கு பணி செய்யாதீர்! அமைச்சர் நாசர் எச்சரிக்கை
சென்னை: கோடைக்காலம் ஆரம்பித்துள்ளதால் தயிர், மோர், லெஸ்ஸி, ஐஸ்கிரிம்,என ஆவின் தயாரிப்புகளை மக்கள் அதிகம் விரும்புவதால் அதை பயன்படுத்தி ஆவினுக்கு வருவாயை பெருக்க வேண்டும் என பால்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் நாசர்.
சட்டசபை நடைபெறும் நாட்களை தவிர சனி, ஞாயிறு என்றாலும் தாமே நேரடியாக திடீர் ஆய்வுக்கு வருவேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆவின் இல்லத்தில் அமைச்சர் நாசர் தலைமையில் பால்வளத்துறைக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது அவர் இதனைக் கூறினார். மேலும், அதில் அமைச்சர் நாசர் பேசியதாவது;

பால் விலை
''பால் விலையை உயர்த்தாமல் சேவை மனப்பாண்மையுடன் முதலமைச்சர் செயலாற்றி வருகின்றார். ஆனால் பால் உப பொருள்களை நாம் அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவு இலாபம் கிடைக்கும். பால் உப பொருள்களின் திறன் மற்றும் உற்பத்தி விவரம் என்ன, குறிப்பாக பால் உபபொருள்களான நெய், வெண்ணெய், பால்பவுடர், பால்கோவா, பாதாம் மிக்ஸ், தயிர், மோர், நறுமணப்பால் இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.''

கோடைக்காலம்
''இப்போது கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது. வருமானம் வரும் நேரம், தயிர், மோர், லெஸ்ஸி, ஐஸ்கிரிம், எல்லாம் மக்களிடம் எளிதில் சென்றடைகின்றது. ஆவின் பால் பொருள்களுக்கென தனி முத்திரை உலக அளவில் உள்ளது. இதனை நாம் பயன்படுத்தி கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும். 75% சதவிதம் பேர் சிறப்பாக பணியாற்றினாலும் ஒருசிலர் செய்யும் தவறுகளால் பின்னடைவு ஏற்படுகின்றது.''

பணப்பட்டுவாடா
''ஆவின் பாலகங்களில் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுபாடு இன்றி கிடைப்பதை ஆவின் அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும். பிரச்சினைக்குறிய ஒன்றியங்களில், அந்தப் பகுதி பொது மேலாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி செல்வதையும் உறுதிபடுத்த வேண்டும்.''

ஆவின் பெருமை
''சென்னை மற்றும் இது போன்ற பெருநகரங்களில், ஞாயிற்றுக்கிழமை விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். கறந்தபால் கலப்படமில்லாமல் மக்களிடம் சென்றடைவது ஆவின் மூலம் மட்டுமே. செயலிலாத சங்கங்களை புதுப்பித்தல் அவசியமாகும். அம்பத்தூர் பால்பண்ணை, சோழிங்கநல்லூர் என அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள்பணியில் இருக்க வேண்டும்.''

ஆய்வுக்கு வருவேன்
''சட்டசபை நடைபெறும் நாட்களை தவிர சனி, ஞாயிறு என்றாலும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொள்வேன், அதற்கு தயரான நிலையில் அனைவரும் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications