காவிரி விவகாரம் பற்றி அடுக்கடுக்காக வந்து விழுந்த கேள்வி.. சிரித்துக்கொண்டே சென்ற அமைச்சர் ஆனந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நீர்வளத்துறை அமைச்சராக உங்கள் பதில் என்ன என்றும் செய்தியாளர்கள் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினர். எந்தக் கேள்விக்குமே பதில் தெரிவிக்காத அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், சிரித்த முகத்துடன் வந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

Minister Bussy Anand

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை உடனே திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய், பெங்களூர் வருகிறார். முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி கர்நாடகா அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார். மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், அதற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் கர்நாடக முதல்வர் பேசி வருகிறார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகா வருகிறார் என்றும், காவிரி ஆற்றுப் பகுதியை பார்வையிடுவார் என்றும் கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் கூறி வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது, செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக முதல்வர் தண்ணீர் திறக்க முடியாது உறுதியாகச் சொல்கிறாரே.. நாம் என்ன செய்யப்போகிறோம்? எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நீர்வளத்துறை அமைச்சராக உங்கள் பதில் என்ன என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக முதல்வர் விஜய் உங்களுடன் பேசி இருக்கிறாரா? முதல்வர் விஜய் கர்நாடகா செல்லும்போது நீங்களும் உடன் செல்வீர்களா என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினர்.

எந்தக் கேள்விக்குமே பதில் தெரிவிக்காத அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், சிரித்த முகத்துடன் வந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார். பத்திரிகையாளர்கள் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுப்பியும் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் சிரித்தபடியே அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சென்றது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்!

கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!

தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!" என விமர்சிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+