மீனாட்சி கோயில் குடமுழுக்கு பாஸ் சர்ச்சை.. திமுகதான் காரணம்.. நிர்மல்குமார் கொடுத்த பலே விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விஐபி பாஸ் நான் யாருக்கும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் தனக்கு தெரிய வந்ததாக கூறிய சிடிஆர் நிர்மல்குமார், திமுகவை சேர்ந்த சிலர் தான் பிரச்சனையை கிளப்பினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சரி வர செய்யவில்லை என்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். வழக்கமாக வரும் கூட்டம் கூட மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழாவிற்கு வரவில்லை என்றும், பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது என்றும் சாடினர்.

CTR Nirmalkumar

அதுமட்டுமல்லாமல் பூஜை செய்து பக்தர்கள் மீது தெளிக்கப்படும் புனித நீர் கூட பக்தர்கள் மீது தெளிக்கப்படவில்லை. ஒரு வாளியில் மாநகராட்சி குழாயில் தண்ணீர் கொண்டு வந்து போலீசார் டம்ளர் ஒன்றில் மக்கள் மீது ஊற்றி இதுதான் புனித நீர் என்று ஏமாற்றினர். மறுபக்கம் ஆர்எஸ்எஸ் மற்றும் தவெக பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் அளிக்கப்பட்டது.

லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின், சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் சுஸ்மிதா உள்ளிட்டோருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக பாஸ் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விஐபி பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. பாஸ் என்ன நிறம் என்பதே எனக்கு முந்தைய நாள் தான் தெரியும்.

என்னுடைய குடும்பத்தினர் கூட குடமுழுக்கு விழாவிற்கு வரவில்லை. அறநிலையத்துறை தான் யாருக்கு பாஸ் கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. திமுகவைச் சேர்ந்த சிலர் தான் சில பிரச்சனைகளை கிளப்பினார்கள். தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்த புகார் பற்றி எனக்கு தெரியாது. அதேபோல் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+