அமைச்சர் துரைமுருகனுக்கு நள்ளிரவில் திடீர் உடல்நலக்குறைவு.. உடனடியாக மருத்துவமனையில் அனுமதி!
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் உடல் நலக்குறைவு
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நள்ளிரவு 1.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மருத்துவமனையில் அனுமதி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

நள்ளிரவில் காய்ச்சல்
இந்தநிலையில் தான் நேற்று நள்ளிரவில் திடீரென அமைச்சர் துரைமுருகனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் துரைமுருகன் நள்ளிரவிலேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த மருத்துவமனை அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில்
நேற்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் துரைமுருகன். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய "கலைஞர் மு. கருணாநிதி வரலாறு" தமிழ்ப் பதிப்பு நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications