அமைச்சர் துரைமுருகன் சொத்து மதிப்பு எவ்வளவு.. மனைவி பெயரில் மட்டும் ரூ.59 கோடி சொத்து!
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு அசையும், அசையா சொத்து என ரூ.11.5 கோடி இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். ரூ.4.01 கோடியில் அசையும் சொத்தும், ரூ.7.43 கோடியில் அசையா சொத்து உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ.59 கோடி சொத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் கூட இல்லை.. வேட்புமனு தாக்கலும் இன்றோடு முடிவடைந்துள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனும் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் துரைமுருகனிடம் அசையும், அசையா சொத்து என ரூ.11.5 கோடி இருப்பது தெரியவந்துள்ளது.
அசையும் சொத்து ரூ.4.01 கோடி மற்றும் அசையா சொத்து ரூ.7.43 கோடி இருப்பதாக அவர் வேட்புமனுவில் கூறியுள்ளார். அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ.59 கோடி சொத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு வழக்கு உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவித்து இருக்கிறார். மேலும் அமைச்சர் துரைமுருகனிடம் அரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ஒரு காரட் வைரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கடந்த முறை தனது வேட்புமனுவில் அவர் கூறியிருந்த சொத்துகளை விட தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது துரைமுருகன் தாக்கல் செய்த வேட்புமனுவில், 9.59 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதாவது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.2.30 கோடி மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.7.28 கோடி என்று கூறியிருந்தார். அவரது மனைவி சாந்தகுமாரி வசம் அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.20.2 கோடி என்று கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications