சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவின் போராட்ட அறிவிப்பு வேடிக்கையானது... நிலவரம் தெரியாமல் அறிக்கை விடுவதா..? -துரைமுருகன்

Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தை மையமாக வைத்து அதிமுக அறிவித்துள்ள போராட்டம் வேடிக்கையானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    முல்லைப் பெரியாறு அணையை அதிமுகவினர் எப்போதாவது நேரில் சென்று பார்த்தார்களா..? சாட்டையை சுழற்றிய துரைமுருகன்..!

    முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு இன்று காலை விமானத்தில் புறப்பட்டுச் சென்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

    நீட் தேர்வுக்கு எதிராக கருத்துக் கூறவே பயந்த அதிமுக, திமுகவை பார்த்து குறை சொல்லலாமா என அமைச்சர் துரைமுருகன் வினவினார்.

    Minister Duraimurugan says, Admk protest announcement is funny

    முல்லை பெரியாறு அணையில் என்ன நடக்கிறது என்ற விவரம் தெரியாமல் அங்கு நேரடியாக சென்று பார்க்காதவர்கள் எல்லாம் இங்கு உட்கார்ந்துகொண்டு அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் இதையெல்லாம் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

    முல்லை பெரியாறு அணையில் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்திவிட்டு நாளை மாலை அது தொடர்பான உண்மை நிலவரத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்கிறேன் என அவர் கூறினார். இதனிடையே மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக முல்லை பெரியாறுக்கு காரில் பயணிக்கும் அமைச்சர் துரைமுருகன், அணைப் பகுதியை படகில் சென்று பார்வையிடவுள்ளார். அண்மையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய நிலையில், அமைச்சர் துரைமுருகனும் அங்கு செல்கிறார்.

    அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு எதிரொலி... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..! அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு எதிரொலி... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்..!

    அமைச்சர் துரைமுருகனுடன் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. அமைச்சர் துரைமுருகன் வருகையை ஒட்டி இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக பொதுப்பணித்துறையினர் தரப்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதனிடையே முல்லை பெரியாறு அணை மூலம் நீராதாரம் பெறும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வரும் 9-ம் தேதி அதிமுக போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் தேவையற்ற ஒன்று என்றும் இரு மாநில மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தி அதிமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

    English summary
    Minister Duraimurugan says, Admk protest announcement is funny
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X