ஸ்டாலின் இந்தியாவுக்கு தலைமை தாங்குவார்! துரைமுருகன் ஆணித்தரம்! காங்கிரஸ் தலைவர் கார்கே கப்சிப்!
ஸ்டாலின் இந்தியாவுக்கு தலைமை தாங்கு காலம் வரும் என துரைமுருகன் பேச்சு.
சென்னை: இந்தியாவுக்கே ஸ்டாலின் தலைமை தாங்கும் காலம் வரும் என திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் மிக ஆணித்தரமாக பேசியிருக்கிறார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
ஸ்டாலின் இந்தியாவுக்கு தலைமை தாங்குவார் என்பதை பொத்தாம் பொதுவாக தாம் கூறவில்லை என்றும் தனது அனுபவத்தை வைத்துச் சொல்வதாகவும் கூறினார்.

நாட்டின் தலைவர்
ஸ்டாலினை பொறுத்தவரை அவர் திமுக என்ற ஒரு இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல என்றும் அவர் நாட்டின் தலைவர் எனவும் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் புகழாரம் சூட்டினார் துரைமுருகன். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் கட்சியை காப்பாற்றிவிட்டார், தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டார் அடுத்ததாக இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பும் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது எனக் கூறினார் துரைமுருகன்.

ஆணித்தரமாக பேசிய துரைமுருகன்
ஒரு மாநில முதல்வர் குடியரசுத் தலைவரை தேர்வு செய்த வரலாறு கருணாநிதிக்கு மட்டுமே இருந்ததாகவும் இனி வரும் நாட்களில் இந்தியாவை ஸ்டாலினை தேடி வந்து தலைமை தாங்கச் சொல்லும் காலம் வரும் எனவும் துரைமுருகன் தெரிவித்தார். தெரிவித்தார் என்றால் ஏதோ பேசுகிற போது, போகிற போக்கில் இதை அவர் சொல்லவில்லை. சத்தியம் செய்யாத குறையாக தனது அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், தனது அரசியல் கணிப்பை வைத்துச் சொல்கிறேன் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஸ்டாலின் இந்தியாவுக்கு தலைமை தாங்கு காலம் வரும் என்பதை மூன்று முறை ஆனித்தரமாக குறிப்பிட்டுவிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

ஸ்டாலின் பிரதமர்?
ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும் என்பதை தான் துரைமுருகன் இப்படி சூசகமாக பேசிவிட்டு சென்றார். இதனிடையே ஸ்டாலினை இந்தியாயே திரும்பிப் பார்ப்பதாகவும், ஸ்டாலினை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் கூறிய துரைமுருகன், நாட்டை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டும் தான் முடியும் என நாடு கருதுவதாகவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்
இதனிடையே 2024ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் உள்ள காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே துரைமுருகன் பேசுவதை கேட்டுக்கொண்டு கப்சிப் என்று அமர்ந்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications