தேவைன்னா கேட்டு வாங்குங்க! என் பேர இழுத்தா.. இதென்ன சமாச்சாரம்னு தெரியலே?.. துரைமுருகனால் சிரிப்பலை
சென்னை: தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற வகையில் இந்த திருச்சுழி திருமேனிநாத சுவாமி சொல்வதை திருத்தணி முருகன் கேட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
Recommended Video
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சிப்காட் தொழில்பேட்டை அமைப்பது தொடர்பாக திருத்தணி எம்எல்ஏ எஸ் சந்தசிரன் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்தான் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட ராக்கிபேட்டை வட்டத்தில் சிப்காட் அமைக்கும் கருத்துரு கற்போது அரசிடம் இல்லை என்றார்.

திருத்தணி எம்எல்ஏ
அதற்கு திருத்தணி எம்எல்ஏ எஸ் சந்திரன் பேசுகையில் திருத்தணி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. இதனால்தான் ராக்கிபேட்டை பகுதிக்கு தொழில்பேட்டை கிடைக்குமா என கேட்கிறேன், அதை அமைச்சர்கள் அமைத்து தருவாரா என்றும் கேட்கிறேன் என்றார்.

தங்கம் தென்னரசு
இதற்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு கூறுகையில் 1984 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மப்பேடு, தற்போது மானலூரில் என வரிசையாக அந்த மாவட்டத்தில் தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளது. திருத்தணி தொகுதியில் உள்ளவர்கள் நான் மேலே கூறியுள்ள தொழில்மனைகள் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.

திருத்தணிக்கு தொழிற்பேட்டை
அதற்கு விடாத எஸ் சந்திரன், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோயிலின் சிறப்பு இல்லை என்று சொல்லாமல் வரம் கொடுக்கும் சிவபெருமான் என்கிறார்கள். எனவே திருச்சுழி தொகுதியிலிருந்து வந்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இல்லை என சொல்லாமல் திருத்தணிக்கு தொழிற்பேட்டையை கொண்டு வர வேண்டும் என்றார்.

தங்கம் தென்னரசு
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், திருத்தணி முருகன் தகப்பன் சுவாமி என பெயர் பெற்றுள்ளதால் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வகையில் திருச்சுழி திருமேனிநாத சுவாமி சொல்வதை திருத்தணி முருகன் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

துரைமுருகன்
தொடர்ந்து திருத்தணி முருகன், பழனி முருகன், திருப்பரங்குன்றம் முருகன் என பேசிக் கொண்டே இருந்ததால் அப்போது எழுந்த அவை முன்னவர் துரை முருகன், உறுப்பினர்கள் தங்களுக்கு (தொகுதிக்கு) என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்க வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் என் பேர இழுத்து முருகன் கோயில், முருகன் முருகன்னு வந்தா இதென்ன சமாச்சாரம் என தெரியலையே என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications