விஜய் அப்படி நினைத்தால்.. எம்எல்ஏ-வாக கூட சட்டசபைக்கு வர முடியாது.. துரைமுருகன் வார்னிங்!
வேலூர்: திமுகவை ஒழிக்க நினைத்தால் தவெக தலைவர் விஜயால் சட்டசபைக்கு கூட வர முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினிகாந்தின் சீனியர்கள் தான் இயக்கத்தின் மிகப்பெரிய தூண்கள் என்ற பேச்சை பார்த்ததாக கூறிய துரைமுருகன், அவருக்கு தொலைபேசி மூலமாக அழைத்து ரொம்ப தேங்க்ஸ் ரஜினி என்று பேசியதாகவும் கூறியுள்ளார்.
அண்மையில் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியது தொடர்பான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த முறை புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ் பற்றி பேசினேன். அப்போது நான் கூறிய கருத்து ஒன்றுக்கு அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டதால், அடுத்து சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். சீனியர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது.

வேலூரில் துரைமுருகன்
அனுபவமுள்ளவர்கள் தான் ஒரு இயக்கத்திற்கு தூண் போன்றவர்கள் என்று தெரிவித்தார். இதன் மூலமாக துரைமுருகன் பற்றி ரஜினிகாந்த் பேசிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமஒ அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
துரைமுருகன் பேட்டி
தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மாவட்ட ஆட்சியர் இங்கு வந்ததில் இருந்து சிறப்பாக வேலை செய்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் போதாது. அவருடன் இருக்கும் அரசு அதிகாரிகளும் பணியாற்றினால் மட்டுமே மக்களுக்கு முழுமையாக அரசின் சேவைகள், திட்டங்கள் சென்று சேரும். மக்கள் அளிக்கும் மனுகள் மனுக்களாகவே இருக்கின்றன.
ரஜினிக்கு நன்றி
இனி உடனடியாக மக்களின் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனிடம் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர், நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அவரை செல்ஃபோனில் தொடர்புகொண்டு இந்த முறையாவது மறக்காமல் பேசினீர்களே.. ரொம்ப தேங்கஸ் சார் என்றேன் என்று தெரிவித்தார்.
விஜய்க்கு வார்னிங்
தொடர்ந்து, இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் திமுக செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்ற விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு, எங்களை கேள்வி கேட்க கூட விஜய் வர மாட்டாரா.. எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட விஜயால் வர முடியாது என்று பதில் அளித்துள்ளார். துரைமுருகனின் நக்கலான பேச்சு அக்கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications