பட்டு பட்டுன்னு அடிக்கனும்! வளவளன்னு இழுக்கக் கூடாது! எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் எடுத்த துரைமுருகன்!
சென்னை: சட்டசபையில் கேட்க வரும் கேள்விகளை எம்.எல்.ஏ.க்கள் பட்டு பட்டுன்னு அடிக்கனும் என்றும் அதை விடுத்து சுற்றிவளைத்து பேசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் அட்வைஸ் அளித்துள்ளார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் கேள்வி நேரத்தின் போது நாள் தோறும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் அட்வைஸ் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும் என சபாநாயகர் அப்பாவுவும் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் மீன் வளக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி வினவினார்.

அமைச்சர் பதில்
அதற்கு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்து அமர்ந்த பிறகு மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏதோ கூற வந்தார். இதனிடையே அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வேகமாக கேள்வி கேட்க வேண்டும் என ஒரு பாடமே நடத்தினார். கேட்க வரும் கேள்விகளை பட்டு பட்டுன்னு அடிக்கனும் என்றும் அதை விடுத்து சுற்றி வளைத்துப் பேசி பேரவையின் நேரத்தை வீணடிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பொது அறிவுரை
அமைச்சர் துரைமுருகன் இதனை அக்ரி கிருஷ்ணமூர்த்திக்காக மட்டும் கூறவில்லை. அண்மைக்காலமாக கேள்வி நேரங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீட்டி முழங்குவதும், பேச வருவதை விடுத்து புகழாரம் சூட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் இது குறித்து சபாநாயகர் என்ற முறையில் அப்பாவுவும் எத்தனையோ முறை கண்டிப்பு காட்டி அமர வைத்து எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கி வருகிறார். ஆனாலும் ஒரு சிலர் பிடிவாதமாக பேசும் நிகழ்வுகளும் இருக்கின்றன.

எல்லோருக்கும் பொருந்தும்
அமைச்சர் துரைமுருகனின் அறிவுரை அகிரி கிருஷ்ணமூர்த்திக்கானது மட்டுமல்ல எல்லோருக்குமானது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே சட்டசபை நடைபெறவுள்ள நிலையில் கேள்வி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications