வாரிசை களமிறக்க தொகுதியை ‘மார்க்’ செய்த சீனியர் அமைச்சர்.. உதயநிதிக்கு பக்க பலம்.. பக்கா பிளான்!
சென்னை: திமுகவில் சீனியர்களுக்கு அமைச்சரவையில் இருந்து 'கெட் அவுட்' சொல்லப்படலாம் என்பதால், தங்கள் வாரிசுகளை முன்வரிசையில் களமிறக்க பலரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் எ.வ.வேலு, தனது மகனை 2026 சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் களமிறக்குவது என்பது வரை இப்போதே முடிவு செய்து விட்டாராம்.
திமுகவில் தலைமைக்கு மிக நெருக்கமானவராகவும், நம்பகமானவராகவும் அறியப்படுபவர் மூத்த அமைச்சர் எ.வ.வேலு. ஸ்டாலினிடத்தில் செல்வாக்கு பெற்ற எ.வ.வேலு, தற்போது 3 முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். எ.வ.வேலு பொறுப்பு வகிக்கும் பொதுப்பணித்துறை சார்பாக இந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எ.வ.வேலு செல்வாக்கு: எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் கலைஞர் கருணாநிதி சொன்னதை நினைவுகூர்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுகவில் சீனியர்கள் பலரின் வாரிசுகளுக்கு எம்.பி சீட், எம்.எல்.ஏ சீட், அமைச்சர் பதவி. மாவட்ட செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. எ.வ.வேலுவின் மகன் கம்பன், திமுக மருத்துவர் அணி மாநில பொறுப்பில் உள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன், தற்போது முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது கலசப்பாக்கம் தொகுதியை தனது மகன் கம்பனுக்கு எ.வ.வேலு பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரே தேர்தலில் தந்தையும், மகனும் போட்டியிட வேண்டாம் என தலைமை அறிவுறுதியதால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனதாக கூறப்படுகிறது.
சீட் இல்லை: அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று கட்சிக்காரர்கள் மத்தியில் முகம் காட்டி வந்தார் கம்பன். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்தி வந்தார். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரிடத்தில் மிகுந்த நெருக்கம் இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் எ.வ.வே.கம்பன் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட தலைமை சீட் கொடுத்துவிடும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனாலும், கம்பனுக்கு சீட் கொடுக்காமல் மீண்டும் சி.என்.அண்ணாதுரையையே களமிறக்கினார் ஸ்டாலின். எ.வ.வேலு, ஸ்டாலினுக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்தும், கம்பனுக்காக சீட் பெறாமல் தனது ஆதரவாளரான சிட்டிங் எம்.பி அண்ணாதுரையையே நிறுத்தி வெற்றி பெற வைத்தார்.
2026 நிச்சயம்: இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் எ.வ.வே கம்பன் களத்தில் இறங்குவது உறுதி என்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் பதவிக்கு வரப்போகிறார் என்ற பேச்சுகள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் அவருக்கு பக்க பலமாக நிற்க அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் முன் நிறுத்தப்பட உள்ளனராம்.
ஏற்கனவே, சீனியர்கள், இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களின் கைபிடித்து வழிகாட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதே அவரது எதிர்கால திட்டத்திற்குச் சான்று. அப்படியான சூழலில், கம்பனை உதயநிதிக்கு அருகில் நிறுத்த எ.வ.வேலு திட்டமிட்டுள்ளாராம். அதற்கு முன்பாக ஒட்டுமொத்த திருவண்ணாமலை வட்டாரத்தையும் கம்பனின் கண்ட்ரோலில் எடுக்கும் வேலைகள் தான் இப்போது நடக்கிறதாம்.
தொகுதி ரெடி: போளூர் சட்டப்பேரவை தொகுதியில் எ.வ.வே.கம்பன் கடந்த சில மாதங்களாக கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்காரர்கள் அழைக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறாராம். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் அதிமுக வசம் இருக்கும் 2 தொகுதிகளில் ஒன்று போளூர்.

போளூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இந்த தொகுதியில் தான் கம்பனை களமிறக்க எ.வ.வேலு குறி வைத்துள்ளார் என்கிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர். கம்பனை வெற்றி பெற வைப்பதற்கான வேலைகள் இப்போதே தொகுதியில் தீவிரமாக நடக்கிறதாம்.
கம்பனுக்கு முக்கியத்துவம்: இப்போது போளூர் தொகுதியில் ஒன்றியம் வாரியாக நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டங்களை தலைமை ஏற்று நடத்தி வருவதே கம்பன் தான். அடிக்கடி போளூர் தொகுதிக்கு வரும் எ.வ.வே கம்பனுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எ.வ.வேலு தனது மகனுக்கு 2026ல் எம்.எல்.ஏ சீட் கேட்டால் நிச்சயம் தலைமை மறுக்காது என்பதால், அவர் நிச்சயம் எம்.எல்.ஏ ஆகி, முக்கிய இடத்திற்குச் சென்றுவிடுவார் என்பதால் தி.மலை திமுகவினர் இப்போதே கம்பனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கின்றனராம். உதயநிதியின் இளம்படையில் இடம்பெறப்போகும் கம்பனின் தயவு தங்களுக்குத் தேவைப்படும் என்பதால் கட்சிக்காரகள் கவனிப்பு பலமாக இருக்கிறதாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications