தளபிதியாரே.. பேரவர் தலிவரே.. தமிழ் படிக்க திக்கி திணறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி! குறுக்கிட்ட சபாநாயகர்!
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்துறையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. இந்த நிலையில் அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தல பிதியாரே, பேரவர் தலைவரெ என தமிழை தப்பு தப்பாக அவர் வாசித்ததும் சபாநாயகர் குறிப்பிட்டு திருத்தியதும் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதை அடுத்துக் கடந்த 5ஆம் தேதி 2026 2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஐந்தாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து 7 முதல் 11ஆம் தேதி வரை சட்ட சபையில் விவாதம் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக்கழகம், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து 12-ஆம் தேதி வேளாண் மற்றும் பொது பட்ஜெட் குறித்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். பொது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் வினோத்தும் பதில் அளித்தனர்.
இதை அடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தன. துறை ரீதியான மானிய கோரிக்கை வீமீதான விவாதம் நடக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று சட்டசபை மீண்டும் கூடியது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்ட தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு திருமணத்தின்போது பொருளாதார சுமையை குறைக்க 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணன் சீர் திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு; தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் பயன் பெறலாம், தனியாக பயணிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் UDID அட்டையை பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இது ஒருபுறம் இருக்க அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இன்றைய உரை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. தளபதி. பேரவை தலைவர் உள்ளிட்ட வார்த்தைகளை கூட ஒழுங்காக படிக்க முடியாமல்.. அதுவும் பார்த்து படிக்க முடியாமல் அவர் திணறியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சொல்லப்போனால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கவே அவர் திணறினார். தளபதியாரை வணங்கி என்பதற்கு பதில் 'தளபிதியார்' எனவும் பேரவை தலைவர் என்பதற்கு பதில் பேரவர் தலைவர் எனவும் பேசினார் அது மட்டுமல்லாமல் வடிவமைக்கப்பட்ட என்பதற்கு பதிலாக வடிக்கப்பட்ட எனவும் இல்லங்கள் என்பதற்கு பதிலாக இலக்கங்கள் எனவும் வாசித்தார்,
அருமை கருதி என்பதற்கு பதிலாக அரிமை கருதி என்றதோடு, உயரம் குறைந்த என்ற வார்த்தைக்கு பதிலாக உயரம் குறித்த எனவும் வாசித்தார். சொல்லப்போனால் அமைச்சர் ஜகதீஸ்வரி வாசித்த பெரும்பாலான வார்த்தைகள் தகவலாகவே இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அமைச்சரின் அறிக்கையை பார்த்து படித்த சபாநாயகர் ஒவ்வொரு முறையும் குறுக்கிட்டு சரியான வார்த்தைகளை உச்சரிக்கை செய்தார். மேலும் அமைச்சர் ஜெகதீஸ்வியின் பேச்சை விஜய் முதல்வர் விஜய் அதிருப்தியோடு பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
