கழுவுற மீனில் நழுவுற மீன் தான் நடிகர் ரஜினிகாந்த்.. அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: சபரிமலை விவகாரத்தில் ரஜினியின் கருத்து தெளிவின்மையைதான் காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் குறித்த தீர்ப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அப்போது "உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதேநேரத்தில் மக்களின ஐதீகங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது" என்று சொன்னார்.

தெளிவில்லாத பதில்
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ரஜினியின் தெளிவின்மையை தான் இந்த பேச்சு எடுத்து காட்டுகிறது. எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித் தரமாக சொல்ல வேண்டும். அப்படி ஆணித்தரமாக கருத்தை சொல்பவர்களைதான் தலைவனாக ஏற்று கொள்ள முடியும்.

கழுகிற மீனில்...
கழுவுகிற தண்ணீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது. இது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். யார் என்ன மாதிரி கருத்தை தெரிவிக்கிறார்? யார் நழுவுகிறார்? என்பது மக்களுக்கு தெரியும்.

அரசியல் தலையீடு கூடாது
அப்படிப்பட்டவர்களை நழுவ விட்டு விட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மத விஷயங்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதுதான் சரி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தேர்தல் பொறுப்பாளர்கள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், தேவைப்படும்போது அதிமுக.,விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications