லேட்டாக புறப்பட்டாலும் லேட்டஸ்டாக புறப்பட்டது அதிமுகதான்- ரஜினி டயலாக்கை கூறிய ஜெயக்குமார்
சென்னை: லேட்டாக புறப்பட்டாலும் லேட்டஸ்டாக புறப்பட்டது அதிமுக என தங்கள் கட்சி மக்களவை தேர்தலுக்கு தயாராவதை அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி பட டயலாக் மூலம் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி என பிள்ளையார் சுழி போட்டு வருகின்றன. ஆனால் அதிமுகவோ கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வந்தது.

லேட்டஸ்ட்
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யுமாறு கட்சி தலைமை வெளியிட்டியிருந்தது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் மக்களவை தேர்தலில் லேட்டாக புறப்பட்டாலும் லேட்டஸ்டாக புறப்பட்டுள்ளோம்.

லெட்டர் பேடு
சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிப்போம். விருப்ப மனு வாங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. அதிமுகவை அழிக்க லெட்டர் பேடு கட்சிகளை சிலர் தொடங்கியுள்ளனர்.

வாடிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கே எஸ் அழகிரி எனது நண்பர். எனவே பண்பாடு கருதி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளோம். காய்த்த மரம்தான் கல்லடிப்படும் என்பதை போல் அதிமுகவை அனைவரும் குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

ஆட்சி அமைக்க
திமுக எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும். அரசியலில் ஸ்டாலினும் தினகரனும் சின்னதம்பிகள். இது போன்ற சின்னத்தம்பிகள் ஏராளமானோர் உள்ளனர். இரு சின்னதம்பிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது என்றார் ஜெயக்குமார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications