அதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார்.. அது நடக்காது.. அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார் என்றும் அது நடக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோரை தொடர்ந்து புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் இன்று அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இவர் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம சபை சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில் மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் பதவிக் கொடுப்பது குழந்தைகளுக்கு ஏதோ மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது. அமமுகவில் வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம். ஆனால் அதிமுகவிலிருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள்.
அதிமுகவை விழுங்க திமுக முயற்சித்து வருகிறது. திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத அதிமுக விலாங்கு மீன். திமுக வாயை திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. யாராவது மாட்டுவார்களா என ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார். அது நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications