பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் திமுக ஆக்கிரமிப்பு அதிமுக.. அமைச்சர் ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது போல் அதிமுகவில் உள்ள சிலரை தங்கள் கட்சியில் இணைத்து பதவி வழங்குவது திமுக ஆக்கிரமிப்பு அதிமுக போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது அக்கட்சியை சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேவையான தொழில் சார்ந்த வளர்ச்சி காலத்தில்தான் முதல்வர் உள்பட அதிமுக அமைச்சர்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.

மாங்காய் புளித்தது

மாங்காய் புளித்தது

இப்பயணம் குறித்து எந்த தகவலும் தெரியாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என ஸ்டாலின் தேவையில்லாமல் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் இந்தியாவுக்கு ஹூண்டாய், போர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளோம்.

பதவி

பதவி

ஸ்டாலின் ஒரு நாள் முதல்வராகவாவது இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் அது நடக்காது. தங்கதமிழ்ச் செல்வனுக்கு பதவி கொடுத்து இருப்பது திமுகவில் உள்ளவர்களுக்கு வருத்தம் இருக்கிறது. அந்த கட்சியில் கடுமையாக உழைத்தவர்கள் இருக்கும் போது அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் என்ற ஆதங்கம் இருக்கிறது.

திமுக ஆக்கிரமிப்பு

திமுக ஆக்கிரமிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் திமுக ஆக்கிரமிப்பு அதிமுகவாக உள்ளது. திமுகவில் நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதையே இது காட்டுகிறது. திமுகவில் ஜனநாயகம் இல்லை. அங்கு ஒன்மேன் ஆர்மியான ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கிறது.

முதல்வர் கோட் சூட்

முதல்வர் கோட் சூட்

வரும் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாக சந்தித்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். இடத்திற்கு ஏற்றார் போல் ஆடை அணிவது வழக்கம்தான். அதுபோல்தான் முதல்வர் கோட் சூட் அணிந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+