இது சின்ன தோல்விதான்.. நான் மட்டும் நேத்து ஆடியிருந்தா.. இந்தியா வின் தான்.. ஜெயக்குமார் அடடே!
Recommended Video
சென்னை: நான் விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வென்றிருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் இந்தியா, நியூஸிலாந்து போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது.
அப்போது நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நின்று போனது. இதனால் இந்த போட்டி நேற்றும் தொடர்ந்தது.

இலக்கு நிர்ணயம்
அப்போது நியூசிலாந்து அணி மீதமிருந்த ஓவர்களை விளையாடி முடித்து மொத்தம் 239 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஜடேஜா
இந்திய அணியின் ரோஹித், ராகுல், கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்னை அடித்து அவுட் ஆகிவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, தோனி அபாரமாக விளையாடினர். எனினும் இவர்களில் ஜடேஜா 92 ரன்களுடனும் , டோனி 49 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ரசிகர்கள் வருத்தம்
இதையடுத்து வந்த இருவர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 18 ரன்களில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனால் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

பின்னடைவு
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியை சந்தித்தது போல் இந்திய கிரிக்கெட் அணியும் பின்னடைவை சந்தித்தது.

வெற்றிதான்
நான் விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வென்றிருக்கும். எதிர்காலத்தில் அதிமுகவும், இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications