கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை மிஸ்டர் துரைமுருகன் - அமைச்சர் பொளேர்
Recommended Video
சென்னை: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என துரைமுருகனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூறியதாவது:
ஒரு கொள்கை, லட்சியம் கொண்டவர்களிடம் முரண்பாடு இருக்கவே இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

தவிர்க்க முடியாது
எந்த முரண்பாடும் கிடையாது. ஆனால் சிலர் கட்சிக்கும் ஆட்சிக்கும் முழுமையான அளவு விமர்சனங்களை வைக்கும் போதுதான் நடவடிக்கை எடுப்பது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. என்ன செய்வது?

கோர்ட்டு
கொறடா அளித்த புகாரின் பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டோம் என கூறிவிட்டு இப்போது நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.

குழப்பம்
அமமுக, திமுக இடையே குழப்பம் உள்ளது. ஆனால் எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக, அரசு, இரட்டை இலை தொண்டர்கள் இவை எங்களின் நிலையானதாக இருக்கின்றன.

துரியோதனன்
திமுக சகுனியாக இருந்து சூழ்ச்சி வேலை செய்வது வழக்கமான ஒன்றுதான். அதிமுகவினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி ஏதும் தெரியாது. அமமுக துரியோதனன் போன்றவர்கள். தற்போது இந்த துரியோதன கும்பலும் சகுனி கும்பலும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

வெற்றி
எனவே இவர்கள் பாண்டவர்களான எங்களை ஒன்றும் செய்யவே முடியாது. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர். வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை தன்னுடையதுதான் என்பதை நிரூபிக்க முடியுமா என துரைமுருகன் கேட்டுள்ளார்.

திமுக
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. குப்புற விழுந்து விட்டு அப்பறம் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இருக்கிறது. அந்த பணம் துரைமுருகனுக்கு சொந்தமானதுதான். 23-ந்தேதிக்கு பிறகு அமமுக, திமுக நினைத்தது நடக்காது என்றார் ஜெயக்குமார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம்












Click it and Unblock the Notifications