அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், கூட்டணி வலுவாக உள்ளதென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும், அவரது பேச்சின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை போலீஸ் எடுத்தது எனவும் அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இதனைத் தெரிவித்தார்.

வலுவாக
பா.ம.க.கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி இல்லை என அன்புமணி ராமதாஸ் கடந்த 31-ம் தேதி பேசியிருந்த நிலையில் அதிமுக கூட்டணியில் விரிசல் என செய்தி பரவியது. இதனிடையே இன்று அது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதென்றும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கைது விவகாரம்
தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது எனவும், வன்முறையை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் போலீஸ் கைது செய்திருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பதில்
இதனிடையே எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும், குறிப்பிட்ட யாரையும் குறி வைத்து பேசவில்லை எனவும் கூறினார்.

புகார் வந்தால்
அப்போதும் அமைச்சரை விடாத செய்தியாளர்கள், கல்லூரிக்குள் குண்டு வீசுவது தொடர்பாக ஹெச்.ராஜா பேசியதை சுட்டிக்காட்டி மீண்டும் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து உரியவர்கள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications